இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் பலியானார் பொலிஸ் உத்தியோகத்தர்!

நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ள விபத்தில் பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மோட்டார் சைக்கிளில் நீர்கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, அடை மழை காரணமாக அவரது மோட்டார் சைக்கிள் வீதியை ...

மேலும்..

அத்தியாவசிய மருந்துப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய தீர்மானம்!

அத்தியாவசிய மருந்துப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரச மருந்தகக்கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக  செலவிடப்பட்ட அந்நிய செலாவணியை  சேமிக்கமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் பிரகாரம்    செயற்படும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் ...

மேலும்..

சீனாவிடமிருந்து மேலும் மருத்துவ உபகரணங்கள்

அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு சீனாவின் 03 விமானங்கள் இன்று இலங்கைக்கு வரவுள்ளது. அதில் 30 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள், 15 ஆயிரம் தனிப்பட்ட பாதுகாப்பு சீருடைகள், 30 ஆயிரம் என் 95 வகை முகக் கவசங்கள் மற்றும் ஏனைய மருத்துவ ...

மேலும்..

அரச ஊழியர்களின் வயிற்றிலடிப்பதை அரசு நிறுத்த வேண்டும்! – முன்னாள் பா. உ இம்ரான் மக ரூப்

-ஹஸ்பர் ஏ ஹலீம்_ அரச ஊழியர்களின் வயிற்றிலடிப்பதை அரசு உடன் நிறுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக ரூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று (08)கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: அரச ஊழியர்களுள் பெரும்பாலானவர்கள் அவர்களது சம்பளத்தில் குடும்பத்தினைப் ...

மேலும்..

அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் இரத்ததானம் முகாம்….

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) நாடெங்கிலும் இயங்கி வரும் இரத்த வங்கி வலையமைப்பில் காணப்படும் குருதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெள்ளிக் கிழமை (08.05.2020) மன்னார் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் இரத்ததானம் முகாம் இடம்பெற்றது. மாந்தை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் ...

மேலும்..

ஜனாதிபதியுடன் பேசினார் ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் சார்ல்ஸ் ஓப்ரைன் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது தொலைபேசியூடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக  தகவல்கள் வௌியாகியுள்ளளன, இதன்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளது, அமெரிக்க மக்கள் ...

மேலும்..

சிவனொளிபாதமலை பருவகாலம் இன்றுடன் நிறைவு!

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் சிவனொளி பாதமலை பருவகாலம் இன்று (வெசாக்) தினத்துடன் நிறைவு பெறுகிறது,இந்த நிறைவு தினத்தினை முன்னிட்டு சிவனொளிபாத உச்சியில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பிரித் ஓதலினை தொடர்ந்து இராணுவத்தினரால் விக்கிரகங்கள் மற்றும் திருவுருவச்சிலை ஆபரணங்கள் அடங்கிய பேளை ஆகிய நல்லத்தண்ணீர் ...

மேலும்..

மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி வெளியீடு?

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இது குறித்த பல்வேறு கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைக்கும் பொழுது மின்னொழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள குருக்கள்மடம் வெள்ளக்கட்டுப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இசசம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த 60 ...

மேலும்..

த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை செயற்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டது சுமந்திரனே- சுரேஷ்

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை செயற்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டது சுமந்திரன் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சம்பந்தர், விக்னேஸ்வரனை நம்பி ஏமாந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கு அறிக்கை ...

மேலும்..

கொரோனா குறித்த பி.சி.ஆர். சோதனைகள் சில தவறானவை- ரவி குமுதேஷ்

கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல பி.சி.ஆர் சோதனைகள் தவறானவை என, இலங்கை அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறல்!

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

மேலும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மூலிகை மருந்து முல்லைத்தீவில் தயாரிப்பு- அங்கீகாரம்பெற நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார். தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் நேற்று (வியாழக்கிழமை) அது தொடர்பான விளக்கத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினரிடம் விபரித்தார். கூட்டுக் குளிசை(கப்சூல்) வடிவில் தயாரிக்கப்பட்ட ...

மேலும்..

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய அறிவித்தல் வெளியானது!

அபாய வலயங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் ...

மேலும்..

பாடசாலைகளை கிருமி நீக்கம் செய்ய அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளின் படி பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு நிதி ...

மேலும்..