இலங்கை செய்திகள்

தமிழ் புறக்கணிப்பு: கிளிநொச்சியில் ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை வழங்கல் நிறுத்தம்!

கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அடையாள அட்டைகள் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளன. குறித்த அடையாள அட்டைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விபரங்கள் உள்ளநிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கிளிநொச்சி ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் புதுடெல்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ...

மேலும்..

கொழும்பில் இருந்து வந்து வேலை இல்லாமல் தவிப்பவர்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் – எஸ். சதாசிவம்

(க.கிஷாந்தன்) கொழும்பில் இருந்து வந்து வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு தோட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் - என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவம் தெரிவித்தார். அட்டனில் நேற்று (06.05.2020) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

மலையகத்தில் வாழும் பௌத்தர்களும் வீடுகளில் இருந்தபடியே ஆன்மீக வழிபாடுகளில்..

(க.கிஷாந்தன்) வருடாந்தம்  மே மாதம்  பெளர்ணமி நாளன்று உலகில் பல நாடுகளிலும் வாழும் அனைத்து பெளத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பெளத்த மதப் பண்டிகையே வெசாக் பண்டிகையாகும். அந்தவகையில் வெசாக் நோன்மதி தினம் இம்முறை இலங்கையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டாடப்பட்டது. மலையகத்தில் ...

மேலும்..

இராணுவ வீரர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்து – 7 பேர் காயம்!

பொலன்னறுவை – ஹபரன பிரதான வீதியின் கிரிதலே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ வீரர்கள் பயணம் செய்த கெப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமை காரணமாகவே இன்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ...

மேலும்..

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 306 கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 306 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு ...

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை!

விசா காலம் முடிவடைந்தும் குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பதிரன இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

ஆசிய அபிவிருத்தி வங்கி தூதுக்குழுவினர் கல்முனை விஜயம். 11உறுப்பினர்களின் முறைப்பாட்டையடுத்து கலந்துரையாடலுடன் களவிஜயம்!

கல்முனை மாநகசபை எல்லைக்குள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000மில்லியன் ரூபா கடனுதவித்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவிருக்கும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள் 11பேரால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து நேற்று(5) திட்டத்திற்கான குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்திருந்தனர். ஆசிய அபிவிருத்திவங்கியின் இலங்கைக்கான இரண்டாம்தர நிலையான நகர அபிவிருத்திக்கான ...

மேலும்..

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மற்றுமொரு மனுத் தாக்கல்!

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நேற்று(புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி ...

மேலும்..

அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி!

அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 5000 ரூபாய் கொடுப்பனவை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொடுப்பனவு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சேவையை ...

மேலும்..

கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் – மஹிந்த!

கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் தலைமையில் அரச வெசாக் விழா நிகழ்வுகள் அலரி மாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் ...

மேலும்..

மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது – பவித்ரா வன்னியாராச்சி

மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது என சுகதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 11ஆம் திகதிக்கு இன்னும் பல நாட்கள் உள்ளமையால், எதிர்வரும் நாட்களின் நிலையைப் பார்த்து தான் ...

மேலும்..

மும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் – பந்துல

மும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால், எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள நிலையில் ...

மேலும்..

முக்கிய வர்த்தமானிகள் இரண்டினை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனு தாக்கல்!

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் உயர் நீதிமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜுன் ...

மேலும்..

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் – ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி தவராசாவினால் நேற்று(புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுப்புக்காவலில் ...

மேலும்..