இலங்கை செய்திகள்

கைவிடப்பட்ட தோட்ட விடுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த இருவர் டயகம பொலிஸாரால் கைது!

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம கிழக்கு தோட்டத்தில் கைவிடப்பட்ட தோட்ட விடுதியொன்றில் மிகவும் ரகசியமான முறையில் பாரிய அளவில் கள்ளச்சாராயம் ( கசிப்பு ) காய்ச்சி வந்த இருவரை டயகம பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். டயகம ...

மேலும்..

ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்!

ரயில் பயணிகளுக்கான அனைத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், அதற்கிணங்க நாளை 11ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் உட்பிரவேசிக்கும் பயணிகளின் உஷ்ண நிலையைப் பரிசோதிக்கும் வகையில் ...

மேலும்..

தனிமைப்படுத்தலை மீறினால் இரு ஆண்டுகள் கடூழியச் சிறை – வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி நாளை வெளியாகும்

தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி இந்தச் சட்டத்தை மீறும் நபருக்கு 2 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்படக்கூடும் என பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ...

மேலும்..

புலிப் பல்லவி இப்போது எதற்கு? – அரசிடம் சஜித் அணி கேள்வி

"கொரோனா விவகாரத்திலும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் அரசு புலிப் பல்லவி பாடிவருகின்றது. புலிகளுக்கு எதிரான போரும், கொரோனா ஒழிப்புச் சமரும் இருவேறுபட்ட விடயங்கள் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்." - இவ்வாறு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது. "பிரதமர் மஹிந்த ...

மேலும்..

அலுவலகப் பணியாளர்களுக்கான சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்

ஊரடங்கு தளர்வு காரணமாக அலுவலகங்கள் வழமைபோன்று இயங்கவுள்ள நிலையில், பணியாளர்கள் எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 1) ...

மேலும்..

ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது- செல்வம்

ஆசிரியர்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுடைய ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், ...

மேலும்..

நாளை முதல் பொதுமக்கள் வீதிகளில் ஒன்றுகூட அனுமதிக்க போவதில்லை – இராணுவ தளபதி

அனைத்து மாவட்டங்களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கட்டுப்பாடுடன் திறப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் ...

மேலும்..

மட்டக்களப்பில் கொரோனா தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கையில் பொலிஸார்

மட்டக்களப்பில் கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்றிட்டத்தில் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் மாநகரசபை இணைந்து நகரத்தின் பொது இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொற்று நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனடிப்படையில் நகரின் பிரதான வீதி மற்றும் கடைத் தொகுதிகள் ...

மேலும்..

கொழும்பில் இருந்து மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (சனிக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். கல்கிசை பொலிஸ் வலயத்தில் 10 பொலிஸ் பிரிவுகளில்  இவ்வாறு மேல் ...

மேலும்..

இயக்கச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 160 பேர் இன்று விடுவிப்பு..!

கிளிநொச்சி – இயக்கச்சி 55 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 160 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 ஆண்களும், 138 பெண்களும் இந்த தனிமைப்படுத்தப் முகாமில் ...

மேலும்..

இயல்புநிலை திரும்புகின்றது என்றாலும் அவசியமெனில் மட்டுமே வெளியே வரவேண்டும்! யாழ். மாவட்ட செயலர் மகேசன் கோரிக்கை

"யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களின் பின்னர் இயல்புநிலை திரும்புகின்றது என்றாலும், பொதுமக்கள் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என்பதை மக்கள் மனதிலிருத்த வேண்டும்." - இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை ...

மேலும்..

உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம்: இலாபம் தேடுவோருக்கு பதிலளிக்கமாட்டோம்- சம்பந்தன்

தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய தரப்பினருடன் உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் இலாபங்களை அடைவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை ...

மேலும்..

காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 55 பேர் சிகிச்சையின் பின்னர் வீடுதிரும்பினர்!

கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 பேர் சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 62 பேரில் 55 பேரே குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியேறியுள்ளனர். அத்துடன் ஏனைய 7 பேரும் ...

மேலும்..

மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று..!

பொது மக்களின் வாழ்க்கை நிலையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது மற்றும் மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து அதில் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது. தனிமைப்படுத்தல் உத்தரவு மற்றும் சட்டப்பூரவமான ...

மேலும்..

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம்!

நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்காக அரச, தனியார் சேவைகளுக்கு செல்லும் பிரிவினருக்கு மாத்திரம் அனுமதி வழங்க ...

மேலும்..