இலங்கை செய்திகள்

கந்தளாய் சீனி ஆலை பிரதேசத்தில் காட்டு யானைகள் கட்டிடங்களை தாக்கி சேதம்…

 எப்.முபாரக் திருகோணமலை கந்தளாய் சீனி ஆலை பிரதேசத்தில் காட்டு யானைகள் கட்டிடங்களை தாக்கி சேதமாக்கியுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு(10)கந்தளாய் சீனிஆலைக்கு சொந்தமான கட்டிடங்களை காட்டு யானைகள் இவ்வாறு உடைத்து சேதமாக்கியுள்ளதாகவும், இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். யானை வேலிகள் அமைக்கப்பட்டும் ...

மேலும்..

சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளின் அளவை அதிகரிக்காமல் சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே ஏற்கனவே கூறப்பட்டமைக்கு அமைய நாளொன்று முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் அளவை 3000 வரை ...

மேலும்..

எப்போது தேர்தல் நடந்தாலுமே சுகாதார நடைமுறை அவசியம் – தேர்தல் ஆணைக்குழுவிடம் ஓரிரு நாட்களில் அறிக்கை கையளிப்பு

பொதுத்தேர்தலை நடத்தும்போது பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான பரிந்துரை அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி நடத்தப்பட்டாலோ ...

மேலும்..

மலேசியாவில் சிக்கியிருந்த 178 இலங்கையர் நாட்டுக்கு!

இலங்கைக்கு வர முடியாமல், மலேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 178 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் கோலாலம்பூர் நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 315 எனும் விசேட விமானம், பயணிகளுடன் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் மொத்தமாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 855ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை முதல் மறு ...

மேலும்..

ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரனுக்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் – கண்டிக்கிறார் செல்வம்

Capital F.M , இணையம் ஊடாக தழிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் பேட்டி ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில் ஒட்டுமொத்தமான ஆயுதப்போராட்டத்தினை தவறு என்று கூறுவது மன்னிக்க முடியாத குற்றமாகும். https://www.facebook.com/selvam.adaikalanathan/videos/3105123459551679/?t=4 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமாக இருந்தது ஆயுதப்போராட்டமாகும். அயுதம் ...

மேலும்..

கட்சியில் இணைய மாகாணசபை வேட்பாளர் உத்தரவாதம் கோரினார் வெள்ளிமலை: கி.துரைராசசிங்கம்

திருவாளர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை தமிழரசுக் கட்சியில் இணைவதாயின் ஏற்கனவே இருந்த கட்சியில் இருந்து நீங்கியமை தொடர்பான கடிதத்தைப் பகிரங்கப்படுத்தச் சொன்னேன் அவர் செய்யவில்லை என்பதோடு அவர் கட்சியில் இணைவதாயின் மாகாணசபை வேட்பாளர் உத்தரவாதம் கோரப்பட்டபோது அதனை உரிய நேரத்தில் தான் தீர்மானிக்க ...

மேலும்..

நாளை கூடுகின்றது அரசமைப்பு பேரவை!

அரமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய அரசமைப்புப் பேரவையின் தலைவர் என்ற அடிப்படையில் நாளைய கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், அரசமைப்புச் ...

மேலும்..

மஹிந்த விசேட அறிக்கை!

"இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. நாளை திங்கட்கிழமையிலிருந்து இயல்பு நிலையை ஏற்படுத்திய பின்னரும் சில இடங்களில் முடக்கல் நிலையை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியிருக்கும்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ...

மேலும்..

சிகையலங்கார நிலையங்களில் பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டாம் Dr.கு.சுகுணன்

பாறுக் ஷிஹான் சிகையலங்கார நிலையங்களில்  பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டாம்    என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட  கொரோனா வைரஸ் தொடர்பில்   ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல்  இடம்பெற்ற போது  மேற்கண்டவாறு ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகத்தான் ஆரம்பிக்கப்படவுள்ளது Dr.கு.சுகுணன்

பாறுக் ஷிஹான்   ஊரடங்கு தளர்த்தப்படுவது    பரீட்சார்த்த முயற்சியாகத்தான்   ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்டத்தில் இறுக்கமான நடைமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு அனைத்து சேவைகளும் சுமூக நிலைக்கு திரும்பும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

கொரோனாவிலிருந்து 321 பேர் குணமடைவு! – 517 பேர் சிகிச்சையில் – 116 பேர் கண்காணிப்பில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 260 இலிருந்து 321 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 847 பேரில் 09 ...

மேலும்..

கூட்டமைப்புக்காக தமிழீழத்தை தாரைவார்க்கோம்! – ராஜபக்சக்களின் சகா விமல் கூறுகிறார்

"நாட்டின் நலன் கருதி நெருக்கடியான சூழ்நிலையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வந்தமைக்காக அவர்களின் வடக்கு, கிழக்கு இணைப்புக் கனவை - சமஷ்டிக் கோட்பாட்டை - பிரபாகரனின் தமிழீழ இலட்சியத்தை அரசு நிறைவேற்றும் என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது. ...

மேலும்..

திருமலையில் சுவர் இடிந்து வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி – 2 வயது சிறுவன் படுகாயம்

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் எனவும், அவரது சகோதரரான இரண்டு வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பரிதாப சம்பவம் கிண்ணியா 03, மாஞ்சோலைச் சேனை, ஆலீம் ...

மேலும்..