இலங்கை செய்திகள்

கொரோனா தொற்று 214 – மேலும் நால்வர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 210 இலிருந்து 214 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 56 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் 151 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 117 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக ஆயிரம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைப்பு…

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக  இலவசமாக ஆயிரம் முகக் கவசங்கள் கல்முனையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு   வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் செயலாளர் ரி.ஜே அதிசயராஜ்   வழிகாட்டலின்   கல்முனை 2  சமுதாய அடிப்படை சங்கங்களின்  பிரிவிற்குட்பட்ட ...

மேலும்..

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகிய இரு சந்தேக நபர்கள் கைது!

பாறுக் ஷிஹான்    கொரோனா  வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு  உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு  கடமைக்கு சென்ற  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகிய இரு   சந்தேக நபர்களை   கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன்  கைது செய்துள்ளதாக  கல்முனை ...

மேலும்..

தான் மரணித்தால் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாமென கூறியவரின் ஜனாஸா ஓட்டமாவடியில் நல்லடக்கம்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) சுமார் மூன்று மாத காலமாக குடும்ப உறுப்பினர்களால் கவனிப்பாரற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதுடைய நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மரணமடைந்தார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்துவந்த இந் நபர் சுமார் மூன்று மாதத்திற்கு முன்னர் திடீர் சுகவீனமுற்ற ...

மேலும்..

மன்னாரில் இடைநிறுத்தப்பட்டிருந்த காற்றாலை மின் உற்பத்தி அபிவிருத்தி திட்டம் மீண்டும் ஆரம்பம்:மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோன்றாஸ் ஊடகசந்திப்பு.

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) ஒரு வாரம் கொனோரா காரணமாக முடக்கப்படிருந்த மன்னார் தாராபுரம் கிராமம் கடந்த ஞாயிறுடன் (12.04.2020) விடுவிக்க மன்னார் அரசாங்க அதிபர் சிபாரிசு செய்துள்ளார். மன்னாரில் மின்சார தேவையை முன்னிருத்தி சில நிபந்தனைகளுடன் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் ...

மேலும்..

வவுனியா வடக்கில் வறுமைக்கோட்டுகுட்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில்  தின தொழில் மூலம் வருமானம் பெறும் சுமார் 2000 மேற்பட்ட குடும்பம்பங்களுக்கு புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் ஊடாக 1000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திடம் கையளிக்கபட்டு கடந்த ...

மேலும்..

மாவையின் நிதியில் தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவு பொதிகள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் நிதியில் வலி.வடக்கு தெல்லிப்பழை பகுதியில் உள்ள துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் பகுதிகளைச் சேர்ந்த 60 குடும்பங்கபளுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. வலிகாமம் ...

மேலும்..

நிந்தவூர் பகுதியில் போதைப்பொருளுடன் கைதான 3 சந்தேக நபர்களை தொடர்விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவு!!

பாறுக் ஷிஹான் வீடொன்றில் போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் கைதான  3 சந்தேக நபர்களை தொடர்விசாரணை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கி உள்ளது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்திற்கு கடந்த 11 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருட்கள் பொதி ...

மேலும்..

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹப்புத்தலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இணைக்கப்பட்ட நபரொருவர் அங்கிருந்து மேலும் இருவருடன் தப்பியோடி, லொறி ஒன்றில் பயணித்துள்ளார். இந்தநிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு, பெரகல நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும், தியத்தலாவை இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 07 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளதாக னர் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 11 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ...

மேலும்..

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அன்பரால் யாழ். முஸ்லிம்களுக்கு உலர் உணவுகள்…

- தவம் அறக்கட்டளை நிலையத்தின் முன்மாதிரி கொரோனா தொற்று அச்சம் ஏற்படுத்தி உள்ள அசாதாரண சூழல் காரணமாக யாழ். மாவட்டத்தில் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அந்தரிக்கின்ற வறிய மற்றும் வருமானம் இழந்த ஒரு தொகை முஸ்லிம் குடும்பங்களுக்கு முற்போக்குவாதி தவம் ஞாபகார்த்த அறக்கட்டளை நிலையத்தால்  நிவாரண பொருட்கள் கடந்த தினங்களில் வழங்கி வைக்கப்பட்டன. தவராசாவின் ...

மேலும்..

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020…

13.04.2020 இரவு சார்வரி புத்தாண்டு பிறக்கிறது. அனைவருக்கும் இதயபூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடிமைத் தளையிலிருந்து விடுதலைக்காக அர்ப்பணித்த எம் தமிழ்பேசும் மக்கள் “கோவிட்-19 (covid-19) உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி ஆண்டாக புத்தாண்டிலிருந்து அர்ப்பணித்து வெற்றி பெறுங்கள். எழுந்து நில்லுங்கள். அறுகு, துளசி,வேம்பிலையுடன் மஞ்சள் கலந்து நன்றே ...

மேலும்..

இந்த கொரோனா நுண்உயிரி பரவுவதற்கு சீனாதான் காரணம் என்ற ஐயம் பலரிடம் உள்ளது…

இந்த கொரோனா நுண்உயிரி பரவுவதற்கு சீனாதான் காரணம் என்ற ஐயம் பலரிடம் உள்ளது. சீனர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்று சொல்லப்பட்டாலும் உணவு தொடர்பாக அவர்கள் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறார்கள். ஊர்வன, நீந்துவன, நடப்பன, பறப்பன என எதையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. ...

மேலும்..

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமையில்! – முழங்காவில் கடற்படை முகாமுக்கு அனுப்பிவைப்பு…

ராகம மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் 27 பேர் மன்னார், முழங்காவில்  கடற்படை முகாமில் உள்ள  தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ராகமை வைத்தியசாலை எனக் கூறப்படும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும், வெலிசறை சுவாச நோய்க்கான ...

மேலும்..

கொரோனாவின் தொற்றிலிருந்து மீண்டது நான்கு மாதக் குழந்தை…

இலங்கையில் கண்டறியப்பட்ட மிகக் குறைந்த வயதுடைய கொரோனா தொற்றாளரான புத்தளம் மாவட்டம், சிலாபம் - நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தை பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியது. குறித்த குழந்தையின் பாட்டன் ஊடாக அக்குழந்தைக்கு கொரோனா தொற்று பரவியிருந்த நிலையில், ...

மேலும்..