இலங்கை செய்திகள்

இம்முறை புத்தாண்டு பண்டிகையை வணங்குகின்ற காலம்: அகத்தினுள் பிரார்த்தியுங்கள்- ஆறு திருமுருகன்

உலகளாவிய ரீதியில் இன்று இலட்சக் கணக்கானவர்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி புத்தாண்டை வீட்டில் இருந்தே அக ...

மேலும்..

காசல்ரி நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்க சென்ற ஓர் பிள்ளையின் தந்தை நீரில் மூழ்கி பரிதாப மரணம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ டங்கல் பகுதியில் இன்று மாலை மீன்பிடிக்கச்சென்ற ஒரு பிள்ளையின் தந்தை நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் காசல்ரீடங்கல் கீழ்ப்பிரிவு தோட்டத்தைச்சேர்ந்த கோபிநராஜன் சந்திரகுமார் வயது 29 என அடையாளம் காணப்பட்டுள்ளார். ...

மேலும்..

இலங்கை இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம்

இலங்கை இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம் ஒன்றனை மேற்கொண்டிருந்தார். கொரோனா தொற்ற ஏற்பட்டுள்ள நிலையில் அர்பணிப்புடன் செயற்பட்டுவரும் இராணுவத்தினரின் பணிகளை பாராட்டும் வகையில் குறிதத் விஜயம்இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை மாங்குளம் பகுதிக்கு விஜயம் மெற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி இராணுவவ தலைமையகத்தில் படை வீரர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார். புத்தாண்டு விடுமுறை ...

மேலும்..

பதியப்படாத சமூக ஊடகங்கள் இணையங்கள் குறித்து மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் தொடர்பாக   பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில்  பரப்புவபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின்  செயலகப் பிரிவுக்கு ஒரு முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா ...

மேலும்..

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானோரை பார்வையிட்டார் சிறீதரன்

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். கடந்த 2 ஆம்(02.04.2020) திகதியிலும் 7ஆம் (07.04.2020) திகதியிலும் அனுமதியுடன் கிராஞ்சியில்  மீன்பிடியில் ...

மேலும்..

மத்திய மாகாண ஆளுநரின் செயலால் மக்கள் வரி பணத்தில் பெற்றுக் கொண்ட உலர் உணவு பொருட்கள் மக்களுக்கு வழங்குவதில் தடை, பொது மக்கள் விசனம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் வாழும் பொது மக்கள் உட்பட மலையக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.இதில் ஏனைய மக்களை விட மலையக பிரதேசங்களில் பல மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக இம் மக்களுக்கு கிழமைக்கு இரண்டு ...

மேலும்..

காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி: கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன்

சந்திரன் குமணன் காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை(12) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற நிலையில் ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவை மீறிய 23,500 பேர் கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 23,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 6,500 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு ...

மேலும்..

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாண அகதிகளின் விடயத்தில் கரிசனை செலுத்துங்கள்’ – பசிலிடம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 18,000 அகதிக் குடும்பங்களுக்கு, நிவாரணங்களையும் அரசின் உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் ...

மேலும்..

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் உறைந்து போயுள்ளது உலகம்- யாழ். ஆயர்

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உறைந்து போயுள்ளது என யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். அத்துடன், இறைமக்கள் தவக்காலம் நிறைவடைந்து புனித வாரத்தில் தடம் பதிக்கும் நிலையில், ...

மேலும்..

மேலும் ஒரு நோயாளி குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நோயாளி குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி தொற்றுக்குள்ளான 199 பேரில் இதுவரை 55 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும்..

மட்டக்களப்பில் இருந்து வானில் மதுபானம் கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் இருந்து ஆரையம்பதிக்கு வானில் மதுபானம் கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் 65 போத்தல் மதுபானங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில்,  கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) இவர்கள் ...

மேலும்..

யாழில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் சாத்தியம்- வைத்திய பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் தற்போது எந்தவொரு கொரோனா நோயாளிகளும் இனங்காணப்படாத நிலையில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

அக்கரைப்பற்று நோயாளியின் மனைவிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற பரிசோதனையின்போது பெண் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 198 இலிருந்து 199ஆக உயர்ந்துள்ளது. குறித்த பெண் அம்பாறை மாவட்டத்தில் கடந்த ...

மேலும்..

பெண் தாதிய உத்தியோகத்தரின் மாலையை பறித்து சென்றவரை தேடி வேட்டை

பாறுக் ஷிஹான் உறங்கிக்கொண்டிருந்த பெண் தாதிய உத்தியோகத்தரின் கழுத்தில் இருந்த தங்க மாலையை அறுத்து சென்றவரை  பொலிஸார் தேடி வருவதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை(10) நள்ளிரவு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ...

மேலும்..