இலங்கை செய்திகள்

தலைக்கவசத்தினுள் கஞ்சா எடுத்துச்செல்ல முற்பட்ட சாய்ந்தமருது நபர் காரைதீவு பொலிஸாரினால் அதிரடி கைது!!

சாய்ந்தமருதினை சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கஞ்சா பொதியினை அணிந்து வந்த தலைக்கவசத்தினுள் பதுக்கி வைத்து சாதுரியமாக எடுத்துச்செல்ல முற்பட்ட போது K.சதீஸ்கர் தலைமையிலான காரைதீவு பொலிஸாரினால் இன்று (09) மாலை 03.00 மணியளவில் அதிரடியாக மடக்கி பிடிக்கப்பட்டு ...

மேலும்..

கொரோனா சந்தேகம்: யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேர் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) மாலை தொரிவிக்கையில், “யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் இதுவரையில் 71 பேர் கொரோனா ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரித்துள்ளது. கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியாராச்சி தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் இதுவரை ...

மேலும்..

நாளையும் மருந்தகங்களைத் திறக்க அனுமதி

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் நாளைய தினமும்(வெள்ளிக்கிழமை) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். நாளை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய ...

மேலும்..

வேறு மாவட்டங்களுக்கு செல்வோர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எச்சரிக்கை!

ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும், அவ்வாறானவர்கள் 14 நாட்கள் ...

மேலும்..

தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் – ஜனாதிபதியின் செயலாளர்

தேர்தலை நடத்துவது மற்றும் நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை, பொதுத் தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜெயசுந்தர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ...

மேலும்..

இன்று ஒருவருக்குத் தொற்று; 5 பேர் குணமடைந்து வீட்டுக்கு * 134 பேர் சிகிச்சையில் * 242 பேர் கண்காணிப்பில்

இலங்கையில் கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 189 இலிருந்து 190 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் இன்று குணமடைந்து ...

மேலும்..

வாழைச்சேனையில் மூவினத்தவர்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்) கொரோனா தொற்று காரணமாக நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு வாழைச்சேனையில் இயங்கி வரும் றுக்சானா ஹோட்டல் & சதன் பேக்கர் உரிமையாளர் காமினி தர்மசிறி என்பவர் தனது சொந்த நிதியிலிருந்து 250 பேருக்கு இன்று ...

மேலும்..

கோழி திருடச் சென்றவர்கள் விட்டுச் சென்ற தொலைபேசியினால் சிக்கினர்

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோழிகளை திருடச் சென்ற இருவர் திருடிய இடத்தில் கைத்தொலைபேசியை விட்டுச் சென்றதால் திருடர்கள் சிக்கிக் கொண்ட சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோழி வளர்ப்பாளர் ஒருவரின் கோழிகள் சிலவற்றை இருவர் சேர்ந்து திருடியுள்ளனர். திருடும் போது ...

மேலும்..

கொரோனாவை இல்லாதொழிக்க 22 மில்லியன் யூரோ நன்கொடை – இலங்கைக்கு வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோவை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, 4 கோடியே ...

மேலும்..

ஊரடங்கு விதிமுறையை மீறினால் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் – பொலிஸ் அதிரடி அறிவிப்பு

"ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளை மீறி மாவட்ட எல்லைகளைக் கடந்து செல்வோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்." - இவ்வாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாளை (10) முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு ...

மேலும்..

மட்டு நகரில் பண்டிகை வியாபாரம் செய்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு: மாநகர முதல்வரின் அதிரடி

மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும் போது அறிவிப்புகளை மீறி திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை உடடியான மூடுமாறு மாநகர முதல்வர் உத்தரவிட்டார். கொரானா நோய்த்தொற்றின் அபாயம் காரணமாக தேசிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது இன்றைய தினம் (09.04.2020) 19 ...

மேலும்..

கொழும்பிலுள்ள வௌி மாவட்டத்தாரை 20ஆம் திகதி வரை அனுப்ப முடியாதாம்!

தொடர் ஊரடங்குச் சட்டத்தால் கொழும்பில் சிக்கியுள்ள வெளிமாவட்ட மக்களை இம்மாதம் 20ஆம் திகதிவரை, அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில்லை என்று அரசு தீர்மானித்துள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 43 பேரை வெலிக்கந்தை கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை:கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் சுகுணன் ஊடகசந்திப்பு.

அம்பாறை மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் தொற்று என அடையாளப்படுத்தப்பட்டவருடன் பழகிய  43 பேரை  மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைப்பகுதியில் உள்ள  வெலிக்கந்தை கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். கிழக்கு ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவு .

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் இன்று (9) தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அம்பாறை  மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம்,  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர ...

மேலும்..