இலங்கை செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும்..

கொழும்பில் 45 பேருக்கு கொரோனா தொற்று: மாவட்ட ரீதியான விபரம் இதோ..!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 214 நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. அந்தவகையில் மாவட்ட ரீதியாக இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி நிலைவரப்படி, கொழும்பில் 45 பேரும், களுத்துறையில் 37, புத்தளத்தில் 34, கம்பஹாவில் 24 ...

மேலும்..

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாம் நிலைமை குறித்து ஆராய்வு

பாறுக் ஷிஹான்  கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அழைத்துவரப்படும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடற்படையினரினால் பராமரிக்கப்படுகின்ற  தனிமைப்படுத்தல்  முகாம் நிலைமை குறித்து ஆராய்வதற்காக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்துள்ளனர். கடந்த ...

மேலும்..

ஜுன் இறுதியில் பொதுத்தேர்தல்? தேர்தல் ஆணைக்குழு பரிசீலனை

நாடாளுமன்றத் தேர்தலை ஜுன் மாதத்தின் இறுதிப் பகுதியில் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலித்து வருகின்றது என அரசியல் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பு மே மாதம் ஆரம்பத்தில் அறிவிக்கப்படின் தேர்தல் பரப்புரைக்கு 45 நாட்கள் வழங்கப்பட வேண்டும். ...

மேலும்..

கொரோனா வதந்தி: மேலும் 7 பேர் கைது – சி.ஐ.டியின் வேட்டையில் இதுவரை 16 பேர் சிக்கினர்

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் மேலும் 07 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைதுசெய்துள்ளது. கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நேற்று (12) வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு!

கொரோனா வைரஸ் பரபுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களைக் கைதுசெய்வதற்காக விசேட வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரை சுமார் 24 மணித்தியாலங்களுக்கு இந்த ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கு இலவச கடல் உணவு விநியோகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் பலர் கடல் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு இலங்கை இராணுவத்தினரும் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து வறிய மக்களுக்கு கடல் உணவுகளை வழங்கும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில், ...

மேலும்..

சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

  "நாட்டில் கொரோனா வைரஸால் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, நாம் ஒவ்வொருவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குப் பொறுப்புடன் செயற்படவேண்டும். இல்லையேல் நாம் பல இக்கட்டான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். பேரிழப்புக்களைக் கூடச் சந்திக்க வேண்டி வரும்." - இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா ...

மேலும்..

கொரோனா தொற்று சந்தேகத்தில் மேலும் 32 பேர் ஒலுவில் முகாமுக்கு – இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

ஜா - எலப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் பழகிய மேலும் 32 பேர் இனங்காணப்பட்டு ஒலுவில் கடற்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் இவர்கள் 21 நாட்களுக்குத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்களின் இரத்த மாதிரிகள் ...

மேலும்..

தோப்புக்கரணம் போட வைத்த இரு பொலிஸார் இடைநிறுத்தம்: இந்தியப் பொலிஸாரின் பாணியா???

கொழும்பு டார்லி வீதியில் நேற்று ஊரடங்குச் சட்ட அமுலாக்க நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிலரைப் பிடித்து தோப்புக்கரணம் போடவைத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியப் பொலிஸாரின் பாணியில் செயற்பட முனைந்த குறித்த இருவர் ...

மேலும்..

கொரோனா குறித்து பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக முறைப்பாடு

கொரோனா வைரஸ் தொடர்பாக பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலைவரம் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

ஆட்டக்காரி, மொட்டைக்கறுப்பனுக்கு நிர்ணய விலை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆட்டக்காரி மற்றும் மொட்டைக்கறுப்பன் ஆகிய நெல் வகைகளிலிருந்து பெறப்படும் நாட்டு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 125 ரூபாயினை நிர்ணயிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இரண்டு நெல்வகைகளிலும் பெறப்படும் தீட்டுப்பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து மேலும் 60 பேர் வீடு இன்று திரும்பினர்!

கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மேலும் 60 பேர்  இன்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 15 பேர் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர். அவர்கள் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே, பண்டாரகம பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 147 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ...

மேலும்..