இலங்கை செய்திகள்

ஸ்வயம் சேவகர்களினால்திருச்செந்தூரில் வாழும் 500குடும்பங்களுக்கு மருத்துநீர் வழங்கப்பட்டது…

சித்திரை வருடப் பிறப்பினை முன்னிட்டு இன்று இந்து ஸ்வயம் சேவகசங்கத்தின் ஸ்வயம் சேவகர்களினால் திருச்செந்தூரில் வாழும் 500குடும்பங்களுக்கு மருத்துநீர் வழங்கப்பட்டது.

மேலும்..

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினால் கொவிட் 19 மனிதாபிமான உதவி…

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினால் கொவிட் 19 மனிதாபிமான உதவியானது இன்று காரைதீவில் உள்ள 300 குடும்பங்களுக்கு 1000/= பெறுமதியான கூப்பன் வழங்குவதற்காக காரைதீவு பிரதேச செயலாளரிடம் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தர்ம கர்த்தாக்கள் மற்றும் நிர்வாக ...

மேலும்..

பொலிஸாரின் 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – சுமார் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சுமார் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்குச் சட்ட அனுமதிபத்திரமின்றி வீதிகளில் நடமாடியவர்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் ...

மேலும்..

இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்

இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்படுகின்றது. அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுல் இருக்கும் ...

மேலும்..

உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத்திட்டம்…

(க.கிஷாந்தன்) ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள டிக்கோயாவில் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத்திட்டம் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி சுமார் 450 குடும்பங்களுக்கு 3500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மா, பால்மா, பருப்பு, டின்மீன்,  தேங்காய் உட்பட அத்தியாவசிய ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இருளில் இருந்த வீதி ஒன்றிற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கை…

கொரோனா வைரஸ் இச்சுறுத்தல் காரணமாக இருளில் இருந்த வீதி ஒன்றிற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அம்மன் கோவில் வீதி கடந்த காலங்களாக இருளில் மூழ்கிக் காணப்பட்டது. அத்துடன் இவ்வீதியில் இருமருங்கிலும் யாசகம் செய்வோர் தங்கி ...

மேலும்..

இலங்கையில் உயிரிழப்புகளை தடுத்த ‘கொரோனா’ வைரஸ்…

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஊழித்தாண்டவமாடிவரும் நிலையில் அதன் கோரப்பிடிக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இலங்கையிலும் இதுவரை எழுவர் உயிரிழந்துள்ளனர். எனினும், ஏனைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாளொன்றுக்கு இடம்பெறும் உயிரிழப்பு விகிதம் கொரோனாவால் ...

மேலும்..

யாழ். சிறைச்சாலையில் கஞ்சா சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தலில்…

வடமராட்சி கிழக்கு மணற்காட்டு கடற்பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துக் கலாநிதி ஆ.கேதீஸ்வரனின் பணிப்புக்கு அமைவாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இந்தியக் ...

மேலும்..

பொதுத்தேர்தல் இப்போது வேண்டாம்! – ஐ.தே.க. வலியுறுத்து…

கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் வந்து, நாட்டில் இயல்புநிலை திரும்புவதற்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால், அது 'கொரோனா' என்ற எமனுக்கு நாட்டு மக்களை பலிகொடுக்கும் 'பலி பூசைக்கு ஒப்பான செயலாகிவிடும்" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ...

மேலும்..

பெய்த மழை காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் பாதிப்பு…

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன் டிலரி தோட்ட பகுதியில் பெய்த மழை காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முழுமையாக பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேரந்த 26 பேர் தற்காலிகமாக அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 14.04.2020 அன்று ...

மேலும்..

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர்தான் தேர்தலாம்! – அரசின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் அமைச்சர் சந்திரசேன…

"கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பின்னரே பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தும்" என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். நெருக்கடியான சூழ்நிலையில், மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொள்ளாது அரசு தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கின்றது என்று எதிரணி உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் ...

மேலும்..

தேர்தல் விடயத்தில் நாம் தலையிடவே மாட்டோம்! – முடிவெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது என்கிறார் பிரதமர் மஹிந்த…

 முடிவெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது என்கிறார் பிரதமர் மஹிந்த "நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது. எனவே, இந்த விவகாரத்தில் நாம் தலையிடவே மாட்டோம். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு எமக்கு எவரும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது." - இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ...

மேலும்..

கொரோனா தொற்று 233…

* இதுவரை 61 பேர் குணமடைவு * 165 பேர் சிகிச்சையில் * 7 பேர் உயிரிழப்பு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றிரவு 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி இலங்கையில் ...

மேலும்..

15 மாவட்டங்கள் பாதிப்பு! – கொழும்பு, களுத்துறையில் தலா 45 பேருக்குத் தொற்று…

கொரோனாவின் பிடிக்குள் நுவரெலியா மாவட்டமும் இலக்காகியுள்ளது. அந்த மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மொத்தமாக 15 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டங்களில் தலா 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ...

மேலும்..

கோகிலாக்கண்டி மக்களுக்கு உலர் உணவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தென்மராட்சியின்கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த உலர் உணவுப் பொதிகளுக்கான அனுசரணையை லண்டன் மாநகரில் வசிக்கும் தாயக உறவுகள் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்ட - சமூக அக்கறையுடைய - சேவை நோக்குக் ...

மேலும்..