இலங்கை செய்திகள்

ரிசாட்டின் சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் ...

மேலும்..

காங்கேசன்துறையில் உலர் உணவு வழங்கல்!

காங்கேசன்துறை மாங்கொல்லைப் பகுதியில் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் இழந்த 20 குடும்பங்களுக்கு நேற்று உலர் உணவு வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது. வேலணை பிரதேசசபையின் வருமானவரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷன், அவரது நண்பரும் புலம்பெயர் தேசத்து நல்லுள்ளம் படைத்த அன்பருமாகிய ஒருவரிடமிருந்து பெற்ற ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சுத்திகரிப்பாளர்களுக்கு உலர் உணவு !

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் 16 பேருக்கு நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுகாதாரத்துறையின் பங்கு - பணி - மிகவும் மகத்தானதாக விளங்குகின்றது. அந்தவகையில் வைத்தியசாலையில் தங்கிநின்று பல்வேறு இன்னல்களுக்கு ...

மேலும்..

முதல்மாத சம்பளத்தை மக்கள் பசிதீர்க்க வழங்கிய தமிழரசு மகளிர் அணி உறுப்பினர்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மகளிர் அணி நிர்வாக குழு உறுப்பினர் லாவண்யா மகேஸ்வரன் அவர்களின் முதல் மாத சம்பள நிதியுதவியில் ( 6380 ரூபாய் ) இன்று மண்டைதீவில் 110 இறாத்தல் பாண் வழங்கப்பட்டது . தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணி!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே வலிகாமம் பகுதியில் இன்று இவர்களின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் ...

மேலும்..

சர்வாதிகார நிர்வாகக் கட்டமைப்புக்குள் நுழையும் அரசாங்கம்- சுமந்திரன் கடும் காட்டம்!

நாட்டில் ஜனநாயக விழுமியங்களை மீறி, சர்வாதிகார நிர்வாக கட்டமைப்புக்குள் நுழையும் வகையிலேயே அரசாங்கத்தின் தீர்மானங்கள் காணப்படுகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறாக கட்டமைப்பு இல்லையென்றால் இந்த தேசிய நெருக்கடியான நிலைமையில் நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் ...

மேலும்..

பாரிய அழிவில் இருந்து யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றியது சுகாதாரத் துறை!

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த கணமே, சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 15இற்கு உட்பட்ட தொற்றாளர்களுடன் கொரொனா ...

மேலும்..

சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – அரசாங்கம்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அன்றாடம் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்கும் சாரதிகளுக்கும் இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே ...

மேலும்..

அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டால் அவை சீல் வைக்கப்படும் – தி.சரவணபவன் எச்சரிக்கை!

ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றிற்கு சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது கடந்த முறைபோன்ற ...

மேலும்..

சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கரைக்கு கொண்டுவரப்பட்டது!

சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் கண்காணிப்பின் கீழ் கடந்த 10ஆம் திகதி இந்த போதைப்பொருள் இன்று(புதன்கிழமை) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் 281 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 46 கிலோகிராம் ...

மேலும்..

சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, தலுபொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிறைத்தண்டனை பெறும் கைதிகள் சிறைக்கு அனுப்பப்பட முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இப்போது நடைமுறையில் ...

மேலும்..

கிளிநொச்சியில் இதுவரை வைரஸ் தொற்று இல்லை: முழங்காவில் தொற்றாளர்கள் குறித்து அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, முழங்காவில் நாச்சிக்குடா கடற்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என அவர் ...

மேலும்..

ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவம்: உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 119 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

19 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும், மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். அதே பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸ் இடர் வலையங்களாக ...

மேலும்..

கொரோனா காலத்தில் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்துள்ள இரு முதலைகள்- ஒன்று பிடிபட்டது!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடுவில் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாலமீன்மடு, தண்ணிக்கிணற்றடி வீதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த முதலையே இவ்வாறு இன்று (புதன்கிழமை) பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த முதலை மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து ஆடு, கோழிகளை ...

மேலும்..