இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

கோப்பாய் முலக்கிளை தலைவர் க.நிதர்சன் (வன்னியசிங்கம்) அவர்களின் வேண்டுதலுக்கு இனங்க E.சரவணன் அவர்கள் கோப்பாய் பொலிஸ் இற்க்கு சென்று கைது செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் உற்பத்தி பொருட்களை விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை நேரில் வந்து பார்வையிட்டு ...

மேலும்..

கிளி ,முல்லை மாவட்டங்களில் 18 லட்சங்களுக்கு மேல் நிவாரணம்…

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும்  எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனம்  கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் கிளிநொச்சியி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளந்த கூலி வேலை செய்யும் குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் ...

மேலும்..

அரசியல் நோக்கங்களுக்காக நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக நடவடிக்கை வேண்டும் – கரு

தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இல்லாதவர்களுக்கு நிவாரண பொருட்களை ...

மேலும்..

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 30 ஆயிரத்து 631 பேர் கைது…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 343 பேர் இன்று காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களிடமிருந்து 102 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று நண்பகல் 12 ...

மேலும்..

5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கும் சேவையில் கிராம உத்தியோகத்தர்கள் மீண்டும் இணைவு…

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 5 ...

மேலும்..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜனாஸா நலன் சேவைகள் அமைப்பின் பணிகள்…

கொரோனா வைரஸ் தோற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம், முகக் கவசம் அணியாமல் வெளியில் செல்லும் மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (16) இடம்பெற்றது. கல்குடா தொகுதியில் பரவலாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வை கோறளைப்பற்று மேற்கு ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவு திங்கட்கிழமை முதல் தளர்வு: இரவில் அமுல்படுத்த அரசு தீர்மானம்??

எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு வேளைகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்மட்ட தகவல்களை சுட்டிக்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தவகையில் சுகாதார அதிகாரிகளின் முன்மொழிவை கொண்டு அரசங்கம் இது குறித்து ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 6 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் குணமடைந்ததுடன் இதுவரை குணமடைந்து ...

மேலும்..

கொரோனா வைரஸ் – உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரசாரம் செய்த 17 சந்தேக நபர்கள் கைது!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை குழப்பும் நோக்கில், சமூக வலைத் தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை  பிரசாரம் செய்த 17 சந்தேக நபர்கள் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் பண்டாரகம, கண்டி, தெஹிவளை, மஹரகம, நுகேகொடை, காலி, வாதுவ, ...

மேலும்..

திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து- சிவமோகன்

திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் கூறுகையில், “கொரோனா சூழலால் பொதுமக்கள் அதிகப்படியான ...

மேலும்..

புலம்பெயர் உதவியில் தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவு!

தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் மக்களுக்கு புலம்பெயர் நல்லுள்ளம் படைத்த அன்பர் ஒருவரின் நிதி அனுசரணையில் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன் அவர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தினரால் வழங்கப்பட்ட ஆடு ஊரடங்கு நேரத்தில் இறைச்சிக்காக களவாடப்பட்டது!

கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் ஆடு ஒன்று திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டிய ஐவர் கையும் மெய்யுமாக இறைச்சியுடன் பிடிபட்:டு கொடிகாமம் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தமிழ் சி.என்.என். புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி 2018 ...

மேலும்..

துளிர் கழகத்தின் ஏற்பாட்டில் 09 ஆம் கட்ட நிவாரணப்பணி 150 குடும்பங்களுக்கு இன்று….

துளிர் கழகத்தினால் குண்டுமடு, வட்டிவெளி, இன்ஸ்பெக்டர் ஏத்தம் பிரதேச 150 பயனாளிகளுக்கு இன்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கொரோணா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்படடுள்ளமையை அடுத்து அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதித்துள்ளது. ...

மேலும்..

வலி.வடக்கு தவிசாளரின் நிதியில் குழமங்கால் மக்களுக்கு உலர் உணவு!

வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், தனது சொந்த நிதியில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் 75 குடும்பங்களுக்கு நேற்று உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா முன்னிலையில், தமிழரசுக் ...

மேலும்..

ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிலருக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு!

நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவு செய்யப்படுவோருக்கு, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தலா 5 ...

மேலும்..