இலங்கை செய்திகள்

கொரோனா நோயை இனங்காண்பதற்கான 20,000 உபகரணத் தொகுதிகள் இலங்கைக்கு அன்பளிப்பு

அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜெக் மா மன்றம் மற்றும் அலிபாபா மன்றம் என்பன ஒன்றிணைந்து கொரோனா நோயை இனங்காண்பதற்கான 20,000 உபகரணத் தொகுதிகளை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளன. 129,011 அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த மருத்துவ உபகரணங்கள் தொகுதி, அவர்களின் இலங்கைப் பிரதிநிதிகளினால் ...

மேலும்..

நுவரெலியா சுப்பர் மார்க்கட்டில் தீ

(க.கிஷாந்தன்) நுவரெலியா நகரத்தில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்  பகுதியளவு எரிந்து சாம்பலாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 18.04.2020 அன்று மதியம் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். நுவரெலியா பொலிஸார், மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், பொது மக்கள், ...

மேலும்..

ஓட்டமாவடி – மீராவோடை குடும்ப நல உத்தியோகத்தர் நிலையம் உடைக்கப்பட்டு TV திருட்டு!

(எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் இயங்கும் மீராவோடை குடும்ப நல உத்தியோகத்தர் (கிளினிக் நிலையம்)  உடைத்து அதிலிருந்த பெறுமதியான எல்.ஈ.டி தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டுள்ள சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் கிளினிகுக்கு வரும் ...

மேலும்..

31 ஆயிரத்து 690 பேர் 29 நாட்களில் கைது! – 8 ஆயிரத்து 151 வாகனங்கள் பறிமுதல்

நாடளாவிய ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 29  நாட்களுக்குள் 31 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8 ஆயிரத்து 151 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அனுமதிப் பத்திரம் இன்றி நடமாடியமை, சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விநியோகம், ...

மேலும்..

நிவாரணப் பணிகளில் அரசியல் இல்லையாம் – மஹிந்த அணி கூறுகின்றது

"அரசியல் இலாப நோக்கோடு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே நிவாரணம் வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அடியோடு மறுக்கின்றோம். எனினும், நிவாரணப் பணிகளில் அரச உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம்." - இவ்வாறு மஹிந்த ...

மேலும்..

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தருணம் இதுவல்ல – மலையக மக்கள் முன்னணி தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம்

கொரோனா வைரஸ் பரவல் இலங்கையையும் சர்வதேசத்தையும் அச்சுறுத்திவரும் சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்துவது பொறுத்தமானதல்ல எனச் சுட்டிக்காட்டி மலையக மக்கள் முன்னணி தேர்தல்கள் ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் ...

மேலும்..

வெளிநாடுகளில் சிக்கியுள்ள 60 ஆயிரம் இலங்கையர்கள் பதிவாகினர்!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள கிட்டத்தட்ட 60 ஆயிரம் இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை ...

மேலும்..

இருவேறு குடும்பங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

இருவேறு குடும்பங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 695 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ...

மேலும்..

அனைத்து மாவட்ட செயலாளர்களும் கொழும்புக்கு வரவழைக்கபட்டனர்

அனைத்து மாவட்ட செயலாளர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மறுஆய்வு செய்ய இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டியராச்சி தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பின்போது அரச ஸ்தாபனங்களில் எவ்வாறு கடமைகளை மீண்டும் தொடங்குவது ...

மேலும்..

மருத்துவ பொருட்களுடன் கட்டுநாயக்க வந்திறங்கிய விமானம்

சீனாவில் இருந்து 16 மெட்ரிக் தொன் மருத்துவ உபகரணங்களை ஏந்திய விமானம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது. ஷாங்காயில் இருந்து சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் எம்.யு-231 இரவு 7.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. கொரோனா வைரஸ் தாக்கத்தை ...

மேலும்..

வடக்கில் எதிர்பார்த்தளவு கொரோனா தொற்றில்லை – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு…

"வடக்கில் கொரோனா நோய்த் தொற்று வீரியமாக இருக்கும் என்று நம்பினோம். நல்லவேளை அப்படி நடைபெறவில்லை. இங்கு தொற்று அதிகரித்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கும் பிரிவை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தோம். தற்போது அவ்வாறான நிலைமை அங்கு காணப்படவில்லை." - இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்திரா ...

மேலும்..

நிந்தவூர் பெண்மனிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்…

பாறுக் ஷிஹான் ஒரே சூலில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(17) இரவு 9 மணியவில் அம்பாறை மாவட்டம் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை(17) காலை பிரவச வலி என 29 வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில்  இரவு ...

மேலும்..

அரசாங்கம் தேர்தலை இலக்காக கொண்டு செயற்கையான இயல்புநிலையை ஏற்படுத்த வேண்டாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவிப்பு…

அரசாங்கம் தேர்தலை இலக்காக கொண்டு செயற்கையான இயல்புநிலையை ஏற்படுத்த வேண்டாம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.  நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அவர் இன்று(18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது கொரோனா ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்க நிதியில் திரு.குகதாசன் ஐயாவின் வழிகாட்டலுடன்…

வலிந்து கானாமல் ஆக்கபட்ட குடும்ப உறவுகளின் வலியை புரிந்த திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தினர் தமது கொரோனா நோய் தாக்கத்தின் மூலம் மக்களின் இயல்பு வாழ்கையில் எற்பட்ட பாதிப்பின் நிவாரண பணியின் ஒர் அங்கமாக இன்றைய நிகழ்வில் தமது நிவாரண பொருகளை கையளித்த ...

மேலும்..

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக களத்தில் குதித்தார் ஞானசார தேரர்…

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் சட்ட மற்றும்  நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ...

மேலும்..