இலங்கை செய்திகள்

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு!

பாறுக் ஷிஹான் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு   அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில்  கடற்படையினரால்  பராமரிக்கப்படுகின்ற  தனிமைப்படுத்தல்  முகாம் வைத்திய பொறுப்பதிகாரியிடம்   நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய வகையில்  ஒரு தொகுதி  ஆயுர்வேத மருந்து ...

மேலும்..

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு இருட்டு வட்டத்தின் மற்றுமொரு உதவி!

-ஐ.எல்.எம் நாஸிம்- சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு மாத்திரைகள் வழங்குவதற்காக இருபது ஆயிரம் (20,000) பக்கெட்டுகளை சம்மாந்துறை இருட்டு வட்ட அமைப்பினர் இன்று(14) அன்பளிப்பு செய்தனர். அமைப்பின் தலைவர் சட்டத்தரணி லாபிரினால் சம்மாந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத்.எம் ஹனீபாவிடம் வழங்கி வைக்கப்பட்டது. இன் ...

மேலும்..

கொரொணாவினால் நமது புலம்பெயர் உறவுகளின் இழப்பானது துயரத்தையும் மிஞ்சிய துயரம்- கி.துரைராசசிங்கம் 

கொடூரமான கொரொணாவினால் நமது புலம்பெயர் உறவுகள் நாற்பத்தொரு பேரை இழந்து நிற்பதென்பது புலத்தில் வாழ் எங்களுக்கெல்லாம் எங்களுடைய துயரத்தையும் மிஞ்சிய ஒரு துயரமாக அமைகின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். அத்துடன், மலர்ந்திருக்கும் புத்தாண்டு எமக்கு ...

மேலும்..

திருமலை விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை - புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல ரத்னாயக்க (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று ...

மேலும்..

போரதீவுப்பற்று வம்மியடியூற்றில் கிராம சேவையாளர்கள் பங்களிப்புடன் கசிப்புக்கான கோடா கொள்கலன்கள் மீட்பு

போரதீவுப்பற்று வம்மியடியூற்றில் கசிப்புக்கான கோடா கொள்கலன்கள் மீட்பு மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட வம்மியடியூற்று கிராமத்தில் காணி ஒன்றினுள் கசிப்பு உற்பத்திக்கான கோடா கொள்கலன்கள் கிராம சேவையாளர்கள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, கிராம மக்களிடம் இருந்து வம்மியடியூற்று கிராம சேவகர் அ.சிறிநாதனிற்கு  கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

குடும்பத் தகராறில் ஒருவர் படுகொலை – ஐவர் பொலிஸாரால் கைது

கெப்பித்திகொல்லாவ பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெப்பித்திகொல்லாவ, இகிரிகொல்லேவ, கோனுகத்தனாவ பகுதியிலேயே நேற்றிரவு (13) இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது, கூரிய ஆயுதமொன்றினால் நபரொருவர் தாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், ...

மேலும்..

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 218 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஊரடங்கு உத்தரவை மீறிய 26,600 பேர் கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரையான 25 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 26,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 6600 மேற்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பிரஜை உயிரிழப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். எம்.எஸ்.சி மாக்னிஃபிகா என்ற கப்பலில் இருந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயதுடைய ஜேர்மனிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் ஒதுக்கீடு!

வவுனியா மாவட்ட மக்களுக்க நிவாரணம் வழங்குவதற்காக 205.51 மில்லியன் ரூபாய் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் நிவாரண விடயங்கள் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், ...

மேலும்..

தாதியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து – எவருக்கும் பாதிப்பு இல்லை!

தாதியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காலி – கொழும்பு பிரதான வீதியில் இன்று(செவ்வாய்கிழமை) விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

உயிர்க் கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெறுவோம்- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மாவை

அடிமைத் தளையிலிருந்து விடுதலைக்காக அர்ப்பணித்த எம் தமிழ்பேசும் மக்கள், கோவிட்-19 உயிர்க் கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்றிடுவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சார்வரி தமிழ் சித்திரைப் புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில் அவர் ...

மேலும்..

பண்டாரகம, அட்டுலுகம பகுதி இன்று காலை விடுவிப்பு

முடக்கப்பட்டுள்ள பண்டாரகம, அட்டுலுகம பகுதி இன்று(செவ்வாய்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து வந்த ஒருவர் கொரோனா தொற்றுடன் குறித்த பகுதியில் சுற்றித்திரிந்தது கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த பகுதி முடக்கப்பட்டது. இந்தநிலையில் 21 நாள் தனிமைப்படுத்தலின் பின்னர் இன்று அந்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

திருகோணமலையில் கோயில்களில் ஒன்றுகூடியவர்களை 21 நாட்களுக்கு தனிமைப்படுத்திய பொலிஸார்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் உத்தரவினையும் மீறி திருகோணமலையில் புதுவருட பூசை வழிபாடுகளுக்காக இந்து ஆலயங்களில் ஒன்றுகூடியவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (திங்கட்கிழமை) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா ஸ்ரீ காயத்திரி கோயிலில் ...

மேலும்..

ஊரடங்கை மீறிச் செயற்பட்ட 26 ஆயிரத்து 600 பேர் சிக்கினர்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 26 ஆயிரத்து 600 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் குறித்த ...

மேலும்..