இலங்கை செய்திகள்

இதுவரை 56 பேர் குணமடைவு; 147 பேர் வைத்தியசாலைகளில்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ...

மேலும்..

210 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று மட்டும் 12 பேர் பாதிப்பு…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் அண்மையில் அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கட்டாரிலிருந்து வருகைதந்திருந்த – ...

மேலும்..

ஒன்ராறியோ கொவிட்-19 பற்றிய தகவல்…

ஒன்ராறியோ அரசாங்கம் வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து 14,000 க்கும் மேற்பட்ட கைச்சுத்திகரிப்பு திரவம், நோய்க்காப்பு உடைகள், நோய்க்காப்பு முகக்கவசங்கள், தொற்றுநோய் பரிசோதனைக் கருவிகள் மற்றும் மூச்சியக்கி இயந்திரங்கள் (ventilators) போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான சமர்ப்பணங்களைப் பெற்றுள்ளது. 7,500 க்கும் மேற்பட்ட அவசரகால வழங்கல்களுக்கான சமர்ப்பணங்களின் மூலம், கொவிட்-19 நோய்த்தொற்றை முறியடிப்பதற்குத் தேவையான ஏறக்குறைய 90 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பின்வரும் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன: - 5.1 மில்லியன் கையுறைகள் - 20 மில்லியன் முகமூடிகள் - 250,000 முகப் பாதுகாப்புக் கவசங்கள் - 50,000 ஒன்ராறியோ காவற்றுறையினருக்கான கைச்சுத்திகரிப்பு திரவங்கள். ஒன்ராறியோவிலுள்ள வணிகங்கள் நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளை மீளுருவாக்கிக் கொள்ளவும், அவற்றுக்கான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் 'ஒன்ராறியோ டுகெதர்' எனும் 50 மில்லியன் நிதியத்தினை ஒன்ராறியோ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது (Ontario.ca/OntarioTogether). ஒன்ராறியோ அரசானது, நோய்த்தொற்றினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நோய்ப்பரம்பலைத் தடுக்கும் வகையில் கொவிட்-19 சோதனையை கணிசமானளவில் மேம்படுத்தியுள்ளதுடன் அதனை பல பாகங்களுக்கும் விரிவுபடுத்துகிறது. இச்சோதனையின்போது மருத்துவமனை உள்நோயாளர்கள், நீண்ட கால பராமரிப்பு மையங்களில் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள், மற்றும் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள் என அடையாளம் காணப்பட்டோர் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் ஒரே நாள் சோதனை முடிவுகளை மீண்டும் ஏற்படுத்தியுள்ளதுடன், இணையவழி மூலமாக நோயாளிகள் மதிப்பீட்டு முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன (Ontario.ca/coronavirus). சுகாதார நிபுணரின் அறிவுறுத்தலுக்கமைய ஒருவர் தனது நோய்த்தொற்றுக்கான சோதனையினை செய்வதற்கு ஏதுவாக ஒன்ராறியோ முழுவதும் ஏறத்தாழ 100 கொவிட்-19 மதிப்பீட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும்..

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி : கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ…

மிகவும் முக்கியமானதொரு அபாயத்தினை எதிர்நோக்கிய நிலையில் இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் இந்தப் புத்தாண்டினை சுகாதார ரீதியான எச்சரிக்கைகள் மற்றும் சிபார்சுகளுக்கு உட்பட்ட வகையிலேயே கழிக்க வேண்டியுள்ளது. தேசத்தின் இருப்புக்காக பொதுமக்களின் சுகாதார நலனுக்கு ஏற்புடையவாறு ...

மேலும்..

கனடா செந்தில் குமரன் அமைப்பு 600 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைப்பு…

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுகின்ற நிலைமையில் தினக்கூலி செய்து தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்திய மக்களிற்கு தமது அன்றாட சீவியத்தை போக்குவதற்கான வழிதெரியாமல் அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலைமையை கருத்தில்கொண்டு கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய ...

மேலும்..

தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவுப் பொதி விநியோகம்!

தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தைசெல்வாபுரம் பகுதிகளில் வாழும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 10 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.   இந்த உலர் உணவுப் பொதிகளை தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியில் வசிக்கும் சேவைநோக்கும் சமூக அக்கறையும் உடைய நல்லுள்ளம் ...

மேலும்..

மறைந்த அன்ரனி ஜெயநாதன் அவர்களின் நினைவாக 755 உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு..!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றற் இளஞ்செழியன் தலைமையில் தொடர்ந்து உலர் ...

மேலும்..

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானோரை பார்வையிட்டார் சிறீதரன்

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். கடந்த 2 ஆம்(02.04.2020) திகதியிலும் 7ஆம் (07.04.2020) திகதியிலும் அனுமதியுடன் கிராஞ்சியில்  மீன்பிடியில் ...

மேலும்..

பதியப்படாத சமூக ஊடகங்கள் இணையங்கள் குறித்து மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் தொடர்பாக   பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில்  பரப்புவபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின்  செயலகப் பிரிவுக்கு ஒரு முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா ...

மேலும்..

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த யாழ். வர்த்தகர்கள் நால்வர் மீது நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் முறைப்பாட்டின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று ...

மேலும்..

கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்வு!

இலங்கையில், மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இன்று மேலும் ஒருவர் குணமடைந்ததாகவும் அதன்படி தொற்றுக்குள்ளான 203பேரில் இதுவரை 55 பேர் ...

மேலும்..

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றனை மேற்கொண்டிருந்தார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்தினரின் பணிகளைப் பாராட்டும் வகையில் குறித்த விஜயம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைந்திருந்தது. மாங்குளம் பகுதிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த ...

மேலும்..

மட்டக்களப்பில் இ.போ.ச. பேருந்திலும் மதுபானம் கடத்தல்: சாலை முகாமையாளர் உட்பட 4 பேர் கைது!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மதுபானக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மதுபானப் போத்தல்களை கடத்திச்சென்ற சென்ற சாலை முகாமையாளர், பேருந்து சாரதி, நடத்துநர் உட்பட நான்கு பேரை நேற்று (சனிக்கிழமை) ...

மேலும்..

கிளிநொச்சியில் கால்வாயில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ...

மேலும்..

பல்கலைக்கழகம் திறக்கப்படவுள்ளமை குறித்த அறிவிப்பு வெளியானது!

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக  மானியங்கள்  ஆணைக்குழுவினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்  மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய   மாணவர்களின் ...

மேலும்..