இலங்கை செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட பிரதேச செயலகங்களுக்கு உயரிய கௌரவம்

  நூருல் ஹூதா உமர் ஸ்ரீலங்கா இஸ்லாமிக் ரிலீப் நிறுவனம், அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் இலங்கையில் நிலையான வாழ்வாதாரத்தின் மூலம் விதவைகள் மற்றும் பெண்களை வழிநடத்தும் குடும்பத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மூன்று வருடங்களாக வெற்றிகரமான முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில் நிலையான வாழ்வாதாரத்தின் ...

மேலும்..

குப்பைத் தொட்டியில் போட வேண்டியவர்களை கட்சி முன்னிலையில் அமரவைப்பதை ஏற்கேன்! சரத் பொன்சேகா காட்டம்

தயா ரத்நாயக்க இராணுவ அதிகாரி என்பதால் அவரை கட்சியில் இணைத்துக் கொள்வதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவையும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும்.பொருளாதார நிபுணர் என்று குறிப்பிட்டுக் கொண்டு அஜித் நிவார்ட் கப்ராலையும் கட்சியில் இணைத்துக் கொள்ளமுடியும். குப்பைத் தொட்டியில் போட வேண்டியவர்களை ...

மேலும்..

கல்முனை சபா ஆரம்ப பாடசாலையின் புதிய மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு

  (எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை சபா ஆரம்ப பாடசாலையின் பிரியாவிடை மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் அதிபர் மர்லியா பர்ஷாத் தலைமையில் பாடசாலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இங்கு மாணவர்களின் கலை; கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், பாடசாலையின் புதிய மாணவர்களின் வரவேற்பும் முதலாம் ஆண்டுக்குச் ...

மேலும்..

மக்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் : அமைச்சர் மனுஷ!

நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவே என அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தாலும், மக்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமே இதுவென அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார். தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ...

மேலும்..

முஜாபர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை சிரிப்பை வரவழைக்கின்றது!

ஒழுக்கமற்ற மக்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவே கண்ணீர்ப்புகைத்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கட்டுக்கடங்காத ஒழுக்கமற்ற மக்களை ஒழுக்கமுள்ளவர்களாக ...

மேலும்..

தனியாருக்கு நெல் கொள்வனவு அனுமதி : கமக்காரர் அமைப்புக்கள் விசனம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிப்பதாக இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். ...

மேலும்..

தேசிய மட்ட சதுரங்க போட்டியில் மட்டு. புனித மைக்கல் சாதனை!

  (அஸ்ஹர் இப்றாஹிம்) கல்வியமைச்சும், அகில இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளனமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட சதுரங்க போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மாணவர்கள் ஐந்து பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். குருநாகல் மாவட்டத்திலுள்ள நான்கு பாடசாலைகளில் ...

மேலும்..

வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடல் கல்முனை மாநகர சபை திட்டம்!

(ஏ.எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப் பலகைகளை நிறுவும் வேலைத்திட்டம் புதன்கிழமை பிற்பகல் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தனியார் பங்களிப்புடனான நகர அழகுபடுத்தல் திட்டத்தின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்படும் இந்த ...

மேலும்..

தணமல்வில பிரதேசத்தில் கஞ்சா செடி,கசிப்பு காய வைத்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன!

  (அஸ்ஹர் இப்றாஹிம்) தணமல்வில பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் குழுவினர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் அரை ஏக்கர் கஞ்சா தோட்டம், கசிப்பு மற்றும் காய வைத்த கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மூவரும் கைது ...

மேலும்..

பன்முகப்படுத்தப்பட்ட நிதிpயைக் கையாள்வது தொடர்பாக ஒட்டுசுட்டானில் கலந்துரையாடல்!

  சண்முகம் தவசீலன் 2024 வருடத்திற்குரிய வரவு - செலவுத்திட்டத்தினூடாக முறையான கிராமிய அபிவிருத்தி மூலம் பிரதேச ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து நாட்டின் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதுடன் வலுவான கிராமிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக பாரிய பொருளாதார இலக்கை அடைந்து தேசிய பணிக்கு ...

மேலும்..

விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் விழிப்புணர்வு நிகழ்வு

எப்.முபாரக் கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதுடன், விவிசாய அமைச்சும், ஸ்ரீP.பாமயன் - இயற்கை விவசாய ...

மேலும்..

மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நினைவேந்தல் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட்டின் 'வாழ்வும் பணியும்' நினைவேந்தல் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை கல்முனை, ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டு ...

மேலும்..

கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு ஹென்றி மகேந்திரனுக்கு தண்டப்பணம் அறவீடு!

பாறுக் ஷிஹான் அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி  என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை  இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான  ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமாகிய  ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டபணமும் ...

மேலும்..

மொறவௌ பிரதேச செயலகத்தில் பால்மா பொதிகள் வழங்கும் நிகழ்வு.

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்டம் மொறவௌ பிரதேச செயலகத்தில் பால் மா பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. பன்குளம் இராணுவ அதிகாரி லெப்.கேணல் பிலிமத்தலாவேயின் அனுசரணையுடன் பிரதிப்பணிப்பாளர் (திட்டமிடல்) ம.துஷ்யந்தனின் வழிகாட்டலுக்கிணங்க பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மொறவௌ பிரதேச செயலகபிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான ...

மேலும்..

அம்பாறை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டார் மாவட்ட செயலர்!

வி.ரி.சகாதேவராஜா காரைதீவு பிரதேச செயலக பிரிவில் அண்மையில் இடம்பெற்ற  வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம நேரில் சென்று பார்வை இட்டார். காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன்  அந்நிலைமையயை மாவட்ட செயலாளருக்கு எடுத்து விவரித்தார். ...

மேலும்..