August 25, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றது

வவுனியா நிருபர் வடக்கு - கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றது: செல்வம் அடைக்கலநாதன் வடக்கு - கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றது என தமிழ் ...

மேலும்..

13ஆவது திருத்தச்சட்டம் நீக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்க முடியாது

(க.கிஷாந்தன்) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கருத்தை ஏற்கமுடியாது. 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாகும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் 25.08.2020 அன்று ...

மேலும்..

குருநாகல் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பிடியாணை இடைநிறுத்தம்!

குருநாகல் அரச சபை கட்டடம் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ விதாரண உட்பட 05 பேரைக் கைதுசெய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ...

மேலும்..

35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் நியமிக்கப்பட்டனர் செயலாளர்கள் – ஒருவர் மட்டுமே தமிழர்

கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி நியமிக்கப்பட்ட 35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அமைச்சரவைச் செயலாளர் டப்ளியூ.எம்.டீ.ஜே. பெனாண்டோவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவையால் இந்த நியமனங்களை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது என அதில் ...

மேலும்..

பிரதேச சபைக்குட்பட்ட ஆதன வரி மீள் மதிப்பீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்

பாறுக் ஷிஹான் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான ஆதன வரி மீள் மதிப்பீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார். நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கான 4 ஆவது பிரதேச சபையின் ...

மேலும்..

மருதமுனை கடற்கரை வீதியை காபெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம்

பாறுக் ஷிஹான் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மருதமுனை கடற்கரை வீதியை காபெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது மருதமுனை பிரதேசத்திற்குட்பட்ட பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு முதல் பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவு வரையிலான ...

மேலும்..

மிதக்கும் சந்தை புனரமைக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் கையளிக்கப்படும்

கொழும்பு மிதக்கும் சந்தையை புனர்நிர்மாணம் செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டுஓகஸ்ட் 25ஆம் திகதி நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு மிதக்கும் சந்தைத் தொகுதியை பார்வையிடுவதற்காகவும் அதனை நவீன ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கூடைப்பந்து சுற்றுப்போட்டி

எப்.முபாரக் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கூடைப்பந்து சுற்றுப்போட்டித்தொடர் இன்று (25) திருகோணமலை மெக்கேசர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. தம்பலகாமம்,கந்தளாய், மொரவெவ,வெருகல், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக அணிகள் மற்றும் மாவட்ட செயலக அணியும் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் ...

மேலும்..

தாயுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை, இங்கினியாகல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட 3 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தன்னுடன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த மகள் காணாமல் போயிருப்பதை அறிந்த தாய், அயலவர்களுடன் இணைந்து மகளை தேடியதுடன் பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

நல்லாட்சியில் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் சுயாதீன தன்மை இல்லை என்கிறார் கெஹலிய!

"நல்லாட்சி அரசால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்படவில்லை. அதைச் சுயாதீனமாக்குவது தொடர்பில் சில மாற்றங்களை எதிர்வரும் அரசமைப்பு திருத்தம் மூலம் மேற்கொள்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது." - இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஆணைக்குழுவை நியமித்த அரசமைப்பு பேரவை ...

மேலும்..

“அரசியலமைப்பு மாற்றத்தில் சிறுபான்மை உரிமைகளை பாதுகாக்க இந்தியா உதவ வேண்டும்”

புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பேணப்படுவதற்கு இந்தியா அக்கறை காட்ட வேண்டுமென, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில், இன்று (25) தூதுவர் கோபால் பாக்லேயைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு ...

மேலும்..

வெளிநாடுகளிலிருந்து மேலும் 296 பேர் வருகை

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தென்கொரியாவிலும் கட்டாரிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு 296 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு ...

மேலும்..

“சிறுபான்மை சமூக விவகாரங்களில் அரசு மென்போக்கை கடைபிடிக்க வேண்டும்”

ஊடகப்பிரிவு முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாகவும், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் கடும்போக்குத் தன்மையினை தளர்த்தி, மென்மையான பார்வையினை அரசாங்கம் செலுத்த வேண்டும் எனவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ...

மேலும்..

கப் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

வெல்லவாய - தணமல்வில வீதியில், நெலுவயாய சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு வெல்லவய - தணமல்வில வீதியில், கித்துல்கோட்டே, நெலுவயாய சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்திலேயே குறித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இரு இளைஞர்களும் ...

மேலும்..

எப்போதெல்லாம் தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றதோ, அப்போதெல்லாம் வீரத்தமிழன் பிறப்பெடுப்பான்

விஜயரத்தினம் சரவணன் தமிழர் தாயகப்பரப்புக்களில் எப்போதெல்லாம் அன்னியர்களது ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றதோ, அப்போதெல்லாம் அத்தகைய அன்னிய ஆக்கிரமிப்புக்களைத் தகர்ப்பதற்கு ஓர் வீரத் தமிழன் பிறப்பெடுப்பான் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்துள்ளார். முல்லைத்தீவில்அமைக்கப்பட்டிருந்த ஒல்லாந்தரது கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட ...

மேலும்..

மத்திய மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தொண்டாவின் மகள்

மாகாணச் சபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், மத்திய மாகாணத்தில் அறுவர் களமிறங்கவுள்ளனர் என்றும், அவர்களில் இருவர் பெண்கள் என்றும் அக்கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்தன. நாடாளுமன்றத் தேர்தலில் இ.தொ.காவின் சார்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மத்திய ...

மேலும்..

சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் ஓய்வுகொடுத்துள்ள விக்கி, கஜன்

சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் ஓய்வுகொடுத்துள்ள விக்கி, கஜன் இனவாதக் கருத்துக்களால் சபையை அலங்கரிக்க முற்படுகின்றார்கள் எனச் சீறிப் பாய்கிறார் மஹிந்த "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கும் நாடாளுமன்றத்தில் இருவர் ஓய்வுகொடுத்துள்ளார்கள். அவர்கள்தான் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும். இவர்கள் இருவரும் தமிழ் - சிங்கள மக்களின் ...

மேலும்..

தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமிழ்க் கூட்டமைப்பை வீழ்த்துவர்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரள்வார்கள்." - இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை தொடர்பில் கருத்து ...

மேலும்..

சஜித் அணியுடன் இணைந்து பரந்துபட்ட அரசியல் கூட்டணி

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தியுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை கரு ஜயசூரியவிடம் ஒப்படைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலில் சு.க. தனி வழி?

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்குத் ...

மேலும்..

அதிர்கிறது காங்கிரஸ்-தலைவராக மீண்டும் சோனியா?

டில்லியில் நேற்று 7 மணிக்கு நடைபெற்றுமுடிந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இடைக்காலத் தலைவராக தொடர்ந்தும் சோனியா நீடிப்பார் எனவும், அடுத்த 6 மாதத்தில் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை ...

மேலும்..

வவுனியாவில் வன்னி மன்னன் பண்டார வன்னியனின் நினைவு நாள் நிகழ்வு 

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது. வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் விழாக்குழுவும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. காலை 8.15மணிக்கு வவுனியா ...

மேலும்..