December 30, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மினி சூறாவளியினால் 65 வீடுகள் பகுதியளவில் சேதம்!

மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட சந்திவெளி பாலையடித்தோனா கிராமத்தில் உள்ள 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்டச்செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தெரிவித்தார். சேதமடைந்துள்ள வீடுகளை முழுமையாக புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் ...

மேலும்..

சகல வசதிகளுடனும் கூடிய 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் நேற்று இடம்பெற்றது. வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த ...

மேலும்..

காணாமல் போன கிராம அலுவலகர் இன்று காலை சடலமாக மீட்பு!

அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம அலுவலகரின் சடலம் இன்று (31)வியாழக்கிழமை காலை அரிப்பு பழைய தோனித்துறை ...

மேலும்..

கட்சித் தலைமையை விமர்சிக்கும் சுமந்திரனுக்கு இன்று உரிய பதில் – மாவை சேனாதிராஜா

கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைத் தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாகப் பேசி வருகிறார். இரண்டாவது முறை கட்சித் தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் பிழையானது. சுமந்திரனின் கடிதம் தொடர்பில் இன்று உரிய முறையில் பதில் வழங்குவேன்." - இவ்வாறு ...

மேலும்..

கல்முனை நகரம் உள்ளிட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கம்- பதற்ற நிலைமை முடிவு

கல்முனை நகரம் உள்ளிட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருப்பதனால்  ஏனைய  இடங்களுக்கான  மாற்று வீதியில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டது. நேற்று(30) மதியம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்ப்பட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அயல் ஊர்களான சாய்ந்தமருது மாளிகைக்காடு நற்பிட்டிமுனை மருதமுனை ...

மேலும்..

தன்னிச்சையானதும், ஜனநாயக விரோத முடிவுமே யாழ் மாநகர சபை இழப்பிற்குக் காரணம்-சுமந்திரன் மாவைக்கு கடிதம்

யாழ் மாநகரசபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு மாவை சேனாதிராஜா அவர்களின் தன்னிச்சையானதும், ஜனநாயக விரோதமானதுமான செயற்பாடே காரணமாகும் என இலங்கத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய ...

மேலும்..

2021 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு 05 ஆம் திகதி கூடவுள்ளது …

அடுத்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (30) முற்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க ...

மேலும்..

மட்டகளப்பு நகர் பகுதியில் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகரித்துவருகின்ற கொரோனா தொற்று காரணமாக தொற்றாளர்கள் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாரை திருகோணமலை மாவட்டங்களில் அதிகரித்துவருகின்றனர். இது தொடர்பில் சுகாதார பகுதியினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த வகையிலே இன்று மட்டக்களப்பில் நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ...

மேலும்..

டுபாயில் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று உரை..

 அடுத்த மாதம் டுபாயில் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். மலாலா யூசப்சையி (வயது 23) கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி பாகிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் ...

மேலும்..

இலங்கையில் வயதில் கூடிய பெண்: மூதாட்டி வேலு பாப்பாத்தி காலமானார்

நாட்டின் ஆகக்கூடிய வயதை கொண்ட பெண் களுத்துறை நாவல பெரிய வைத்தியசாலையில் வயது.நேற்று மாலை காலமானார்.இறக்கும் போது இவருக்கு 117 ஆகும் தொடாங்கொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மெஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவில் வேலு பாப்பாத்தி என்ற முதாட்டியே இவ்வாறு காலமானார். 1903ஆம் ...

மேலும்..

கல்முனையின் ஒரு பகுதி முடக்கம் : வீதியோரத்தில் பட்டினியில் வாடும் இல்லிடமற்ற ஏழைகள் !

கல்முனை மாநகர செயிலான் வீதி முதல் கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் கடந்த திங்கட்கிழமை இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பிரதேசத்தில் சடுதியாக ...

மேலும்..

ஜனவரி 10 முதல் மட்டக்களப்பு மாவட்ட பெரும்போக நெற் செய்கை அறுவடையினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்ய தீர்மானம்

மட்டக்ளப்பு மாவட்டத்தில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லினை அரச நெல் சந்தைப் படுத்தல் சபையினால் எதிர்வரும் ஜனவரி 10 ஆந்திகதி முதல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் ஏற்பாட்டில் பெரும்போக நெல் அறுவடைகளை ...

மேலும்..

வீதியில் நின்ற நபரை வெட்டிய குழுவின் 4 சந்தேக நபர்கள் சரண்…

முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி மரணமடையச்செய்து தலைமறைவாகி இருந்த  நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இன்று (30) முற்பகல் குறித்த சந்தேக நபர்களை தேடி பொலிஸ் குழுக்கள் தேடுதலை மேற்கொண்ட நிலையில் குறித்த நால்வரும் சரணடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஏலவே ...

மேலும்..

மட்டக்குளிலிருந்து ஹப்புத்தளை சென்ற மூவருக்கு கொரோனா!

கொழும்பு மட்டக்குளிய பகுதியில் இருந்து மரண சடங்கில் பங்கேற்பதற்காக ஹப்புத்தளை சென்றிருந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹப்புத்தளையில் கஹகொல்ல, பங்கட்டி, தங்கமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் தொழில் நிமித்தம் கொழும்பு, மட்டக்குளிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மரண ...

மேலும்..

முள்ளியவளை -நாவல்காடு பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார் ஒருவர் குறித்த உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து குறித்த பகுதி ...

மேலும்..

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் தெரிவு

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசூதனும் தமிழ் தேசிய ...

மேலும்..

சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே மாகாணசபை: அந்த உரிமையை இழக்க முடியாது! மஸ்தான் எம்.பி…

சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாகவே மாகாணசபை வந்தது. எனவே அந்த உரிமையை நாம் இழக்க முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (30.12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய ...

மேலும்..

வாழைச்சேனை சுகாதார பிரிவில் இவ்வருடம் 508 பேருக்கு டெங்கு நோய்…

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முப்பதாம திகதி வரை 508 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் ...

மேலும்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (30) காலை ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியை கோரி இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதோடு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் கரிசனை கொள்ளப்படவேண்டும் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் -யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.   வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக இன்று (30)இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதன் ...

மேலும்..

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பேருக்கு கொரோனா

உக்ரைனில் இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பேருக்கு கோவிட் -19 க்கு தொற்று உள்ளதென சோதனைகளில் தெரிய வந்துள்ளது. குறித்த தகவலை சுகாதார சேவைகள் பிரதி பணிப்பளார் தெரிவித்தார். முதல் சுற்றுலா பயணிகள் விமானம் கடந்த திங்களன்று (28) உக்ரைனில் ...

மேலும்..

மாகாண சபை தேர்தல் திகதி குறிப்பிடப்படாது ஒத்திவைப்பு.

கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் மஹா சங்கத்தினரின் வேண்டுகோள் உள்ளிட்ட நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு காரணங்களையும் கருத்தில் கொண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்துவதை திகதி குறிப்பிடப்படாது பிற்போடுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அமைச்சர் மஹிந்த அமரவீர ...

மேலும்..

ஜனவரி 1 முதல் வாட்சப் சில மொபைல் சாதனங்களுக்கு வேலை செய்யாது!

அன்றாடம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கும் Whatsapp செயலியானது ஜனவரி 1 முதல் சில Iphone, Android இயங்குதளங்களுக்கு வேலை செய்யாது என whatsapp நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ளது. whatsapp இன் அடுத்து வரும் புதிய பதிப்பானது ஐபோனின் IOS9 ஐ ...

மேலும்..

ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் வியாபார மேம்பாட்டுக்கு காரைதீவில் நிதி உதவி

INSPIRED திட்டத்தின் கீழ் ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் GAFSO நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் "பொருளாதார அபிவிருத்தியினூடாக சமூகங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல்" எனும் கருப் பொருளின் ஊடாக காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அழகு கலையில் ஈடுபடும் பங்குபற்றுனர்களுக்கான மானிய ஊக்குவிப்பு தொகையாக இரண்டு ...

மேலும்..

மக்களின் பொடுபோக்கினால் சாய்ந்தமருதில் குப்பைக் கொத்தணி உருவாகும் அபாயம்; களத்தில் மாநகரசபை உறுப்பினர் ஜௌபர்

கல்முனை மாநகரசபை ஆளுகைக்குட்பட்ட சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி, தோணா பாலத்துக்கு அருகில் மீண்டுமொரு குப்பைக் கொத்தணி உருவாக்கி விடுமோ என்ற அச்சம் இப்பிரதேச மக்களை ஆட்கொண்டுள்ளது. 2020.12.30 ஆம் திகதி சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி, தோணா பாலத்தை அண்மித்த பிரதேசத்தில் குப்பைகள் குவிந்ததால் ...

மேலும்..

கமலா ஹாரிஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் ..

அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ், கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும் மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ...

மேலும்..

வீரமுனை-வீதியில் நின்ற நபரை வெட்டிய குழுவின் 5 சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸ குழு

முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி மரணமடையச்செய்து தலைமறைவாகி இருந்த மேலும் ஐந்து சந்தேக நபர்கள்  இன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020.12.26 ஆம் திகதி அன்று மாலை 6 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் வீதியில் நின்ற 30 வயது ...

மேலும்..

நாட்டில் 42 ஆயிரத்தையும் கடந்த கொரோனா நோயாளர்கள்

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 460 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 418 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஏனைய 35 பேர் சிறைச்சாலை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்லிங்கம் மணிவண்ணன் தெரிவு

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்லிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டைவிட ஒரு மேலதிக வாக்குகளைப் பெற்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது ...

மேலும்..

வீரமுனை மற்றும் அண்டிய தமிழ் கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜிதரன் (அசோக்) – கொலை சம்பவம் …

உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சம்மாந்துறை- வீரமுனையை சேர்ந்த கணேசமூர்த்தி ரஜிதரன் (அசோக் ) (வயது30) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று(29) மாலை மரணமடைந்தார் . சம்பவம் தொடர்பாக ...

மேலும்..