January 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொத்துவில் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை :  அப்துல் வாசித் 

  (நூருல் ஹுதா உமர்) பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலைவன்மையாக கண்டிப்பதுடன் குறித்த தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்மந்தமுமில்லை என பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கலாநிதி எம்.எஸ்.அப்துல் வாசித் தெரிவித்துள்ளார். பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளரான பெருமாள் ...

மேலும்..

பொத்துவில் பதில் தவிசாளர் மீது தாக்குதல்…

பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளரான பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று (14) வியாழக்கிழமை இரவு இனந்தெரியாதோரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரணி பிரதேசத்திலுள்ள பதில் தவிசாளருக்கு சொந்தமான சுறுல்லா விடுதியொன்றில் வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பார்த்தீபன், தற்போது பொத்துவில் ...

மேலும்..

சீரற்ற வானிலை : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக,  23 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் 5 ஆயிரத்து 137 குடும்பங்களை சேர்ந்த, ...

மேலும்..

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறை -ஆச்சரியமும் வருத்தமும் அடைந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு தான் ஆச்சரியமும் வருத்தமும் அடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவிலேயே மேற்கண்டவாறு ...

மேலும்..

கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் 199வது கொடியேற்றம்

கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 199வது வருட புனித கொடியேற்ற விழா நேற்று   (14) வியாழன்  மாலை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் இடைபெற்றது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை ...

மேலும்..

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிப்பு!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உரிய தரப்பினருடன் ...

மேலும்..

வானிலை அறிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் ...

மேலும்..

சீனாவில் 8 மாதங்களில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் மரணம்!

சீனாவில், எட்டு மாதங்களில் பின் முதன்முறையாக ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். அவர், ஹெபெய் (Hebei)மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தின் பல நகரங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. சீனாவில், இன்று புதிதாக 138 பேரிடம் வைரஸ்  தொற்று அடையாளம் காணப்பட்டது. அவர்களில் 124 பேர், ...

மேலும்..

காத்தான்குடி தனிமைப்படுத்தல் நீடிப்பு-கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன்

காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார். டிசெம்பர் 31ஆம் திகதி அமுலுக்கு வந்த காத்தான்குடி பிரதேச தனிமைப்படுத்தல் ...

மேலும்..

தமிழர்களைப் புறந்தள்ளி வைத்துவிட்டு எந்தக் கருமத்தையும் ஆட்சியாளர்கள் முன்னெடுக்க முடியாது! – பொங்கல் செய்தியில் சம்பந்தன்..

  தமிழர்களும் இலங்கைத் திருநாட்டின் பிள்ளைகள். எம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாமல் – எம் மக்களைப் புறந்தள்ளி வைத்துவிட்டு எந்தக் கருமத்தையும் ஆட்சியாளர்கள் முன்னெடுக்க முடியாது. தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள புதிய அரசமைப்பானது நிரந்தரத் தீர்வைக்காண வழிகாட்ட வேண்டும்.என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழ வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக ...

மேலும்..

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்குதலும் கட்டிட திறப்பு விழாவும்..

(நூருல் ஹுதா உமர் ,ஐ.எல்.எம். நாஸிம்) சம்மாந்துறை பிராந்திய மக்களின் மிக நீண்டகால சுகாதார தேவைகளை நிறைவேற்றுமுகமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான  மருத்துவ உபகரணங்களை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன்  சம்மாந்துறை ...

மேலும்..

மன்னார்-திருக்கேதீஸ்வர ஆலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (14) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ...

மேலும்..

கல்முனை மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படது.

(சர்ஜுன் லாபீர்,எஸ்.அஸ்ரப்கான், ரியாத் ஏ மஜித்) கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கல்முனையில் உள்ள 11கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரண பகிர்ந்தளிப்பு இன்று (14) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள்ளது. இந் நிவாரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கணக்காளர்.வை ...

மேலும்..

இறந்தும் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்து வாழ வைத்த ஆசிரியை!

துபாய் நாட்டில்  பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சையத் ரபாத் பர்வீன் (வயது 41) இவருக்கு திருமணமாகி 11 மற்றும் 18 வயதுடைய 2 மகன்கள் சொந்த ஊரான டெல்லியில் படித்து வருகின்றனர். அமீரகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் குளிர்கால ...

மேலும்..

கொரோனாவால் வவுனியாவில் களையிழந்தது பொங்கல்

வவுனியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை பொங்கல் பண்டிகை களை இழந்துள்ளது. வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரில் அமைந்துள்ள முக்கிய ஆலயங்களில் இம்முறை பொங்கல் ...

மேலும்..

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமாகியது!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்படி ,பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ...

மேலும்..

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடு!

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று ஆலயங்களில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட வழிபாடுகள் நடைபெற்றன. இதற்கமைய கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் ...

மேலும்..

என் கணவர் தண்ணீருக்குள் இருக்கும் மீன் போல – நடிகை பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கும் கணவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குடும்ப வாழ்க்கைக்கு தடையாக இல்லை எனக் கூறியுள்ளார். இந்தியாவின் கடைசி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதையடுத்து அவர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ...

மேலும்..

தமிழில் ‘வணக்கம்’ கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தமிழில் 'வணக்கம்' என்று கூறி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாட இருப்பதாகவும் கூறினார். மேலும் ,"வணக்கம், பிரிட்டனில் உள்ள தமிழ் சமூகத்தினருக்கு தை பொங்கல் வாழ்த்துகள். ...

மேலும்..

நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் இன்னும் ...

மேலும்..

யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தைப்பொங்கல் திருநாள்

தமிழர் திருநாளாம் தை திருநாள் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தெற்று அச்சம் காரனமாக சுகாதார நடை முறைகளை பின்பற்றி பொங்கல் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

மேலும்..

வவுனியா-வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. அவருடன் தொடர்புகளை பேணிய சில ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், நேற்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ...

மேலும்..