March 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழழகனின் 22 வருடகால அரச சேவையை பாராட்டி கௌரவிப்பு

  கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடந்த 05 வருடங்களாக கடமையாற்றிவிட்டு தனது 55 வயதில் 22 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு நிலைக்குச் சென்ற எஸ்.தமிழழகனின் சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் திருகோணமலை காரியாலயத்தில் இன்று மாலை (23) இடம்பெற்றது.   கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி எஸ்.நவேந்திர ராஜா, திட்டமிடல் வைத்திய பிரிவின் வைத்திய அதிகாரிகளான எஸ்.சிவச்செல்வம், எஸ்.உதயனன், கப்பல்துறை மருந்து உற்பத்திப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.வர்மேந்திரன், பிரதம சேவை உத்தியோகத்தர் திருமதி. சீ.ஆர்.நிர்மலநாதன் உள்ளிட்ட சுதேச திணைக்கள உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதன்போது, ஓய்வுபெற்றுச் சென்ற எஸ்.தமிழழகனின் 22 வருடகால அரச சேவைகளையும், கடந்த 05 வருடங்களாக சுதேச மருத்துவத் திணைக்கத்துக்கு அயராது உழைத்து செயற்பட்ட அவரின் உன்னதமான சேவைகள் பற்றி பேசப்பட்டு, பாராட்டி கௌரவித்ததுடன், ஞாபகார்த்த சின்னங்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.   கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் அவருக்கான ஞாபகச் சின்னத்தையும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன் பணப் பரிசிலையும், திட்டமிடல் வைத்திய பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயனன் பொன்னாடை போர்த்தி கௌரவித்த அதேவேளை ஏனைய உத்தியோகத்தர்கள் ஞாபகப் பரிசில்களையும் வழங்கி வைத்து கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

மேலும்..

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரனையை நிறைவேற்றிக்கொள்ள பெரும்பான்மையை பெற முடியாமற்போயுள்ளது

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியாமல் போனதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 47 உறுப்பினர்களில் பிரேரணைக்கு ஆதரவாக அவர்களினால் 22 ...

மேலும்..

சம்மாந்துறையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் எண்ணத்தில் உருவான  "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை உருவாக்குதல் எனும் பிரதான தொனிப்பெருளின் அடிப்படையில் ஒரு வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் மூன்றாம் கட்டமாக ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் கோரிக்கைகளை முன்வைத்து இன்றோடு ஒன்பதாவது நாள் உண்ணாவிரதம் நிறைவு.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் கோரிக்கைகளையும்  அரசியல் கைதிகளின் விடுதலையும்,  தமிழ் மக்களின் சம உரிமைகளையும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி நா. ஆஷா மற்றும் திருமதி இரா. ...

மேலும்..

தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களும் போராட்டத்தில்

இராகலை மாகுடுகலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராகலை. மாகுடுகலை மற்றும் கிளன்டெவன் ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் தொடர்ந்து 17 வது நாளாக மேற்கொண்டு வருகின்ற வேலை  நிறுத்த போராட்டத்திற்கு வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள் ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகள் ; எதிராக 22 நாடுகள் வாக்களிப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. அத்துடன் 14 நாடுகள் வாக்களிப்பில் களந்து ...

மேலும்..

கொழும்பு ,கண்டி பிரதேசங்களில் காற்று மாசடையும் தன்மை அதிகம்

கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் காற்று மாசடைதல் உலக சுகாதார அமைப்பினால் சிபாரிசு செய்யப்பட்ட மட்டத்திலும் பார்க்க கூடுதலாக அதிகரித்திருப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகர எல்லை பகுதிகளை தவிர்ந்த நாட்டில் ஏனைய ...

மேலும்..

கொரோனா-மேலும் 248 பேர் பூரணமாக குணம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (23) மேலும் 248 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 87,306 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 551 ...

மேலும்..

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இவ்வாண்டுக்கான மாகாண இலக்கிய விழா போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரல்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இவ்வாண்டுக்கான மாகாண இலக்கிய விழா போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன் அறிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஆகக்குறைந்தது ஐந்து வருடங்களை நிரந்தர வதிவிடமாக கொண்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளை இனங்கண்டு, அவர்களை ...

மேலும்..

முல்லைத்தீவில் வளிமண்டளவியல் காரியாலயம் திறப்பு

முல்லைத்தீவில் 31 வருடங்களுக்குப் பின்னர் வளிமண்டளவியல் காரியாலயம் திறக்கப்பட்டது. உலக வானிலை நாளான இன்று (23) அக்காரியாலயம் திறக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தை அடுத்து, முல்லைத்தீவில் இருந்த வளிமண்டளவியல் காரியாலயம் 1990களில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க களுவெவ இராஜினாமா!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவேவ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாலக கலுவேவ தனிப்பட்ட காரணங்களினால் பதவியை இராஜினாமா செய்ததாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். 2018 ஆம் ஆண்டு 52 நாள் அரசியல் நெருக்கடி காலகட்டத்தில் குறித்த ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஆர்பாட்டம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும்..

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை!

தேசிய அடையாள அட்டையை ஒரு நாள் சேவையின் கீழ் பெற்றுக் கொள்ளும் முறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவையானது கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில், கடந்த ...

மேலும்..

குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் 400 ஏக்கர் நிலங்களை கோரும் தொல்லியல் திணைக்களம்!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக சுவீகரிக்கும் நடவடிக்கையைதொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ...

மேலும்..

பாராளுமன்ற அமர்வு இன்று

பாராளுமன்ற அமர்வு இன்று (23) மீண்டும் இடம்பெறுகின்றது. சுங்க கட்டளை சட்டத்தின் 10 ஆவது சரத்துக்கு உட்பட்ட இறக்குமதி சுங்க வரி தொடர்பிலான பரிந்துரைகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் நிதியமைச்சரினால் விதிக்கப்பட்டுள்ள 2 ஒழுங்கு விதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி ...

மேலும்..

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 6பேர் பலி!

அமெரிக்காவின் கொலராடோவில் சந்தேக நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலராடோவின் போல்டரில் உள்ள கிங் சூப்பர்ஸ் மளிகை கடையில் அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ...

மேலும்..

மாகாண சபை தேர்தல் – இரு வாரத்திற்குள் தீர்வு!

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கலுக்கு இரண்டு வாரகாலத்தில் தீர்வை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தலை எக்காரணங்களுக்காகவும் பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என தெரிவித்துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க ,எத்தேர்தல் ...

மேலும்..

ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் மோசடி, முறைகேடு; பரீட்சையை மீள நடத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மோசடி, முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால், அப்பரீட்சையை உடனடியாக இரத்துச் செய்து, மீள் பரீட்சை நடாத்தப்பட வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண ...

மேலும்..

கனிதரும் மரங்களால் தீவகத்தை வளம்பெறச்செய்வோம்!

கனிதரும் மரங்களால் தீவுப்பகுதியை வளம்பெறச்செய்வோம் எனும் கருத்திட்டத்தினை  வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்கள் முன்னெடுத்துச்செல்கின்றார் . அதற்கமைய அண்மையில்  மகா சிவராத்திரி தினமன்று  புங்குடுதீவு  அரசினர்  வைத்தியசாலையின்  அருகில்  அமைந்துள்ள  சதானந்த சிவன் கோயிலில் சிவனடியார்களுக்கு   மா , ...

மேலும்..

தலவாக்கலையில் முச்சக்கரவண்டி – லொறி விபத்து – யுவதி பலி

(க.கிஷாந்தன்)   தலவாக்கலை – சென்.கிளயார் - டெவோன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.   இந்த விபத்து இன்று காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.   நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான ...

மேலும்..

கல்முனை பிரதேச காணி உபயோக திட்டமிடல் குழு மீளமைப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரச காணிகளைக் கையாள்வதற்கான காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் குழு மீளமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரச காணிகள் தொடர்பிலான அனைத்து ...

மேலும்..

240 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் நேறறு (2021 மார்ச் 22) மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற டிப்பர் வண்டியுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத கடத்தல்களைத் ...

மேலும்..

இரவில் நடமாடிய 4 பெண்களுக்கு50 ரூபாய் தண்டம் விதிப்பு !

எவ்விதமான காரணங்களும் இன்றி, இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே, அந்த நான்கு பெண்களுக்கும் தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த நால்வருக்கும் எதிராகவும் ...

மேலும்..

வடக்கு – கிழக்கு பகுதிகளில் அனுமதி பெறப்படாது இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்-சாணக்கியன்

வடக்கு - கிழக்கு பகுதிகளில் முறையான அனுமதி பெறப்படாது நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் பார்வையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று மாலை (22) விஜயம் செய்த அவர் ...

மேலும்..