May 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இராகலை மாகுடுகல தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டு வந்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

(க.கிஷாந்தன்) இராகலை மாகுடுகல தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டு வந்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தோட்டம் உரிய முறையில் நிர்வாகத்தால் பராமறிக்கப்படாமைக்கு  எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தை சுட்டி காட்டி இவ்வாறு தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவிய போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர்  இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலையீட்டால்  முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் மற்றும் பிரஜாசக்தி செயற்திட்டத்தின்  பணிப்பாளர் பாரத் அருள்சாமி இதனை தெரிவித்துள்ளார். மேற்படி பிரச்சினைக்கு தீர்வாக இதுவரை மாகுடுகல தோட்டத்தை  நிர்வகித்த செரண்டிப் நிர்வாகத்திடம் இருந்து அதனை மத்துரட  பிளாண்டேஷன் நிர்வாகத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக  பாரத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் மத்துரட  பிளாண்டேஷன் நிர்வாகம் மாகுடுகல தோட்டத்தை அபிவிருத்தி செய்து நடத்திச் செல்வதாக உறுதியளித்தாக  அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். முக்கியமாக மாகுடுகல தோட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து  சலுகைகளையும், உரிமைகளையும் வழங்க மத்துரட பிளாண்டேஷன் நிர்வாகம் இணங்கம் வெளியிட்டள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலையிட்டு  மேற்படி பிரச்சினைக்கு தீர்வை வழங்கியதாகவும் தொடர்ந்தும் மாகுடுகல தோட்ட தொழிலாளர்களுக்காக இ.தொ.க முன்னிற்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் மற்றும்  பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி உடன், இ.தொ.காவின் உப தலைவர் பிலிப்குமார், நுவரெலியா மாவட்ட பணிப்பாளர் லோகதாஸ், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், உறுப்பினர் லிங்கேஷ்வரன், மாவட்ட தலைவர்கள், தலைவிமார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்..

முள்ளிவாய்க்காலில் நிபந்தனைகளுடன் நினைவேந்தல் செய்ய அனுமதி கொடுத்தது நீதிமன்றம்!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ம் ஆண்டு நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் ...

மேலும்..

யாழில் முடக்கப்பட்ட இரண்டு கிராமங்கள் நாளை விடுவிப்பு

யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நாளை காலை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்..

சம்மாந்துறையில் எழுமாறான அன்டிஜனில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி!

(ஐ.எல்.எம். நாஸிம்) இலங்கையில் மிகவேகமாக பரவிவரும் கொரோனா அலையை கிழக்கில் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் அவர்களின் பங்குபற்றுதலுடன் சம்மாந்துறை வீதிகளில் காரணமின்றி உலாவித்திரிவோர், ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுஷ்டிக்க அரசாங்கம் தடை விதித்திருந்தது. அங்கு யாரும் செல்லாத ...

மேலும்..

இந்து பண்பாட்டு நிதியத்திற்கு  பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) அலரி மாளிகையில் இந்து பண்பாட்டு நிதியத்திற்கான  உறுப்பினர்களை நியமித்தார். இந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் 1985 ...

மேலும்..

கொக்கட்டிச்சோலையில் பயணத்தடை நேரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம்; பொலிஸாரினால் முற்றுகை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணத்தடை நேரத்தில் கசிப்பு உற்பத்தி நடாத்திய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் உள்ள களப்பு பகுதியிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முனைக்காடு களப்பு பகுதியில் ...

மேலும்..

10,000 கட்டில்கள் அமைக்கும் செயல்திட்டம்-அம்பாறையில் துரிதம்…

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் பணிப்பின் பேரில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலமையினை கருத்திற் கொண்டு 10 நாட்களுக்குள் 10,000 கட்டில்கள் அமைக்கும் செயல்திட்டம் தேசிய இளைஞர்கள் கழக சம்மேளனத்திடம் ஒப்படைக்கப் பட்டு நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இதன் ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறிய இருவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

வவுனியா, சாந்தசோலைப் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறிய இருவருக்கு எதிராக பொலிசாரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா, சாந்தசோலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சனிக்கிழமை (15.05) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த ...

மேலும்..

தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் இன்றைய தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது  – மனோ கணேசன்  

ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் சனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாத்தாக மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டுவரப்பட்டால், எமது மக்களின் ...

மேலும்..

இளம் மனைவி அடித்து கொலை செய்த கணவன்… வாய்த்தர்க்கம் முற்றியதை அடுத்து இரும்பு கம்பியால் தாக்குதல்!

கொழும்பு, மஹரகம பிரதேசத்தில் கணவர் ஒருவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்சினை தொடர்பான வாய்த்தர்க்கம் முற்றியதை அடுத்து இரும்பு கம்பியால் கணவன், மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். மஹரகம , பமுனுவ வீதி பிரதேசத்தில் நேற்று இந்த கொலை ...

மேலும்..

வீதி விபத்து, போக்குவரத்து குற்றங்களை அறிவிக்க புதிய செயலி

இன்றுடன் ஆரம்பமாகும், உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெறும் வகையிலான கைப்பேசி செயலியொன்றை காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்(ஓய்வுநிலை) சரத் வீரசேகர தலைமையில், அவ்வமைச்சில் ...

மேலும்..

வவுனியாவில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியாவில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (16.05) இரவு வெளியாகின. அதில், மாமடு பகுதியைச் சேர்ந்த 7 ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தடையை ரத்துச்செய்யகோரி நீதிமன்றத்தில் பத்திரம்!

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்தநிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை உடன் இரத்துச் செய்யுமாறு ...

மேலும்..

பொருளாதார ரீதியான எமது மக்களின் அபிவிருத்தி என்பது சகல பிரதேசங்களுக்கும் அனைவருக்கும் ஆறுபோல் பரவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு-டக்ளஸ்

பொருளாதார ரீதியான எமது மக்களின் அபிவிருத்தி என்பது சகல பிரதேசங்களுக்கும் அனைவருக்கும் ஆறுபோல் பரவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கரணவாய் மண்டான் நீர் ஏரியில் இன்று (17) இறால் அறுவடையை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து ...

மேலும்..

போகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர், கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு விரைவாக பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் மற்றும் உடனடியாக பிணை வழங்க வேண்டும் என கோரியே குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இவர்கள் ...

மேலும்..

ஆரையம்பதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண பொதிகளை இராஜாங்க அமைச்சர் நேரில் சென்று வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேரில் சென்று வழங்கிவைத்தார். அரசாங்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் வறிய மக்களுக்கு சுமார் ...

மேலும்..

ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை; கொவிட் – 19 அசாதராண சூழ்நிலையால் ஒக்டோபருக்கு ஒத்திவைப்பு

(விஜயரத்தினம் சரவணன்) கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை ...

மேலும்..

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி!

நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை நீக்கப்பட்ட பின்னர் மாகாணங்களில் வழமையான பயணிகள் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும். இருப்பினும் இன்று தொடக்கம் இம் மாதம் இறுதி வரையில் மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதினால் மாகாணங்களுக்கிடையில் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என்று இலங்கை ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவு பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. அட்டன் பகுதியில் ஒன்றும், நோர்வூட் பகுதியில் மூன்றும், பொகவந்தலாவ பகுதியில் ஐந்து ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ...

மேலும்..

நினைவு தூபிகளை உடைத்து நினைவு கூறல் தடுக்கப்படுவதால் மன வடுக்க்களை அகற்ற முடியாது -ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி .தவராசா

  இறுதி போர் மக்களை மீ ட்பதற்கான போர் என்று அரசாங்கம் ஆயிரம் விளக்கங்களைக் கொடுக்காலும் அது இனவழிப்புக்கான அத்தனை அடையாளங்களை கொண்டுள்ளது என்பதை கூர்ந்து நோக்கும் போது மிக தெளிவாகத் தெரியும் இரானுவ தரப்பில் தமிழ் பொது மக்களின் உயிர்களும் ஆயிரக்கணக்கில் பரிக்கப்பட்டன .இங்கு பொது ...

மேலும்..

யாழில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரின் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமையவே இன்று முதல் பொதுமக்கள் ...

மேலும்..