July 25, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒருமாத காலத்திற்குள் இலங்கையை சூழவுள்ள ஆபத்து!

இலங்கையின் பிரதான வைரஸ் பரவலாக டெல்டா வைரஸ் திரிபு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் மாறும் அபாயமுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளில் தற்போது டெல்டா வைரஸ் பரவி வருவதை அடிப்படையாகக் கொண்டு இதனை கூற முடியுமென விசேட வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர். தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் ...

மேலும்..

யாழின் அழகிய கடல் நீரேரி கச்சாய்!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் தென்திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல்நீரேரி. இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு ஆகிய ஊர்கள் அமைந்துள்ளது. இக்கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் கடல்நீரேரி ‘சேத்துக்கடல்’ எனவும் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ். கடல் நீரேரிக்குச் செல்லமுடியும் . அங்கிருந்து ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய ...

மேலும்..

பூண்டுலோயா நகரில் ஜே.வி.பியினர் போராட்டம்

(க.கிஷாந்தன்) சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஜே.வி.பியினர் இன்று (25.07.2021) பூண்டுலோயா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே.வி.பியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இலவசக் ...

மேலும்..

மட்டக்களப்பில் தலை கீழாக புரண்ட மோட்டார் கார்!

மட்டக்களப்பு நகரின் மணிக்கூடுக் கோபுர சந்தியிலே கார்கள் இரண்டு மோதி, இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கார்களில் ஒன்று மல்லாக்க புரண்டு, பலத்த சேதமடைந்துள்ளது. இந்தக் காரில் பயணித்தவரே படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து ...

மேலும்..

பேச்சுவார்த்தைக்கு தயாராகின்றதாம் கூட்டமைப்பு!

அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கான சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், வட கிழக்கு பிராந்தியங்களில் ...

மேலும்..

மியண்டாட் விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுக போட்டியும் ; கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு !

சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழக 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட சீருடை அறிமுக நிகழ்வும், சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் கழகத்தலைவர் ஏ.பாயிஸின் தலைமையில் சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த ...

மேலும்..

தென்னிலங்கையில் புகழாரம் சூட்டப்பட்டு வருகின்ற நீதிபதி இவர்தானாம்!

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து தென்னிலங்கையில் மீண்டும் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. மனிதாபிமானமற்ற சமூகத்தில் மீண்டும் மீண்டும் பிரகாசிக்கப்படும் தமிழரான நீதிபதி இளஞ்செழியனின் மனிதநேயம் மாறியுள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட மாணிக்கவாசகம் இளஞ்செயழின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவரது மெய்பாதுகாவலரான சரத் ஹேமசந்திர ...

மேலும்..

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 82ஆவது அகவையை முன்னிட்டு சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு அஞ்சலி!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 82ஆவது அகவையை முன்னிட்டு பழைய நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.   இதன்போது இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ...

மேலும்..

சிறுமியின் மரணம் தொடர்பில், இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய நிலையில், உயிரிழந்த 16 வயதான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில், இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், ...

மேலும்..

காரைதீவில் இரண்டாது நாளாகவும் தடுப்பூசி செலுத்தும் பணி ; பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் அவர்களின் தலைமையில் இரண் டாவது நாளான இன்று பொதுமக்கள் அரச உத்தியோகத்தர்கள்,கற்பினி தாய்மார்கள்,பாலூட்டும் தாய்மார்கள், தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வருகை ...

மேலும்..

சேதன பசளை பயன்பாடு அடுத்த மாதம் முதல் அறிமுகம்

எதிர்வரும் பெரும்போகத்தின்போது சேதன பசளை பயன்படுத்தும் முறைமை தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் புதிய செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். பயிர் செய்கைகளுக்கு தற்போது பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் பசளைகள் ...

மேலும்..

நாட்டின் பெரும் சொத்து எம்மை விட்டு பிரிந்தது!

திரு. R. ராஜமகேந்திரன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள். கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் திரு. R. ராஜமகேந்திரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் புகழ்பூத்த தொழில்துறை குழுமத்தினை 1983ம் ஆண்டில் பொறுப்பேற்று பல்வேறுபட்ட இடர்காலங்களுக்கு மத்தியிலும் மிகச்சிறப்பாக கட்டியமைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவராக அவர் இந்நாட்டின் கௌரவத்துக்குரியவர். யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக ...

மேலும்..

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக கொட்டகலையில் போராட்டம்

(க.கிஷாந்தன்) சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (25.07.2021) முன்னெடுக்கப்பட்டது. மலையக பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் ப்ரொடெக்ட் சங்கம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பிவாறு குறித்த போராட்டத்தை ...

மேலும்..

நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட தலைமைக்காக வரலாறு காத்திருக்கின்றது!

கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண் எதிரே நிற்கும் இந்தச் சோக நாட்களில், ஜனநாயக வழியில் தமிழ் இனத்தின் விடுதலை எழுச்சியை வழி நடத்திச் செல்லக்கூடிய நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட தலைமைக்காக வரலாறு காத்திருக்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் தொடர்பில் ...

மேலும்..

மகாராஜா நிறுவன உரிமையாளர் ராஜ மகேந்திரன் காலமானார்!

மஹாராஜா நிறுவனத்தின் தலைவர் ,முகாமைத்துவ பணிப்பாளர் கிளி ராஜாமஹேந்திரன் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார். இவர் சக்தி, சிரச , எம் .டி.வி ஆகிய ஊடகங்களை இலங்கையில் உருவாக்கி சுதந்திர ஊடகத்தின் பாதுகாப்பை வழி நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கிய இவரது ...

மேலும்..