July 20, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாராளுமன்றம் தொடர்ந்தும் பொது ஜன பெரமுனவின் பிடியில் உள்ளது -சுமந்திரன் எம்.பி.

பாராளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் உள்ளது. அதனைக் கலைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். மக்கள் ஆணையை இழந்த பொதுஜன பெரமுனவின் பிடியிலேயே இன்னமும் தான் உள்ளதை மீண்டும் நாடாளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தைக் ...

மேலும்..

அரசை பொருட்படுத்தாமல் மக்களுக்காக உழைக்க வேண்டும் -மஹிந்த ராஜபக்க்ஷ

எந்த அரசாங்கத்தை நியமித்தாலும் மக்கள் பிரதிநிதிகள் நாட்டின் குடிமக்களுக்காக உழைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய ஜனாதிபதி தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளைக் காண ஆவலுடன் ...

மேலும்..

அரசியல் மாற்றத்தை செயற்படுத்தவும் -சஜித் பிரேமதாச

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தாம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை அமுல்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இன்றைய சூழலில் அரசியல் மாற்றம் மிகவும் அவசியமானது. அரசியலமைப்பின் ...

மேலும்..

QR குறியீடு பெற்றவர்களை மீண்டும் பதிவு செய்யுமாறு கோரிக்கை

கணனியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்த பெரும்பாலானவர்களை மீண்டும் பதிவு செய்யுமாறு எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இன்று 1919 என்ற இலக்கத்தினூடாக குறுஞ்செய்தி மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

புதிய ஜனாதிபதியின் தெரிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி” – அசாத் சாலி!

    நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் தெரிந்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியென தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.   புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வாழ்த்தி, அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,   "முதிர்ந்த அரசியல் ...

மேலும்..

கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு !

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகரில் சமையல் எரிவாயு விநியோகத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதனால் முறைகேடுகள் இடம்பெறுவதுடன் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு அவர்களின் ஆதரவாளர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கி வருகின்றனர். இதனால் தேவையுடைய மக்களாகிய எங்களுக்கு கிடைப்பதில் இடர்பாடுகள் இருக்கிறது என பொதுமக்கள் ...

மேலும்..

பலமுள்ள பிரதமரை தேடுவதே நமது பணி என்பதால் ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்ய தீர்மானித்துளோம் : தேசிய காங்கிரஸ்

நூருல் ஹுதா உமர் பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் கூட்டப்பட வேண்டும் என்று பலரும் கருதுகின்ற இச் சந்தர்பத்தில் பலமுள்ள ஒரு பிரதம அமைச்சரை தேடுவதே நமது பணி என்பதால் றணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக தேசிய காங்கிரஸ் அரசியல் ...

மேலும்..

யாழ் கல்வியங்காடு  அம்மு அக்கூறிய விற்பனை நிலையத்தில் திருடன் கைவரிசை !!!

  ஜூலை 20, 2022 - யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம்  கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அம்மு அக்கூறியம் விற்பனை நிலையத்தில் நேற்றைய தினம் (19) திருடன் ஒருவன் விற்பனை நிலையத்தின் கூரையை பிரித்து உட்புகுந்து சிசிடிவி கேமராக்களை அவதானிப்பதையும், அதன் பிற்பாடு சிசிடிவி கேமராக்களை ...

மேலும்..

சி.வி விக்னேஸ்வரன் ரணிலுக்கு ஆராதவு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவர் ஜனாதிபதி தெரிவின்போது நடுநிலை வகிக்கப்போவதாகவும், தீர்மானம் மாறக்கூடும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே இன்று அவர் ரணிலுக்கு ...

மேலும்..

இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபரைப் பொருட்படுத்தாமல், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. பத்து பேருக்கு மிகாமல் அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

மக்கள் ஒன்றிணைந்த பாராளுமன்றத்தை கோருகின்றனர் – PAFFREL

பொது இலக்கை அடையும் நோக்கத்துடன் அனைத்து வேட்பாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவரை அடுத்த ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்தால் அது சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு (PAFFREL) தெரிவித்துள்ளது. நாட்டுக்கு பொதுவான வேலைத்திட்டம் தேவையே தவிர அரசியல் முரண்பாடுகள் அல்ல ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளன. இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், கட்சி உறுப்பினர்கள் மற்றும் இ.தொ.காவுடன் இணைந்த ...

மேலும்..

தனியார் பஸ் போக்குவரத்து பாதிப்பு

தனியார் போக்குவரத்து துறை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தேவையான எரிபொருள் கிடைக்காமையால் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவைர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தனியார் பஸ்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது ...

மேலும்..

பாராளுமன்றம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை முன்னிட்டு இன்று பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்..

ஜனாதிபதி யார்? தீர்மானம் இன்று….

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று(20) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ​கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவினால் கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர ...

மேலும்..

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்க மாட்டோம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதில்லை என ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ வேறு வழியில்லாமல் இருப்பதால் இந்தத் ...

மேலும்..