தனியார் பஸ் போக்குவரத்து பாதிப்பு

தனியார் போக்குவரத்து துறை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தேவையான எரிபொருள் கிடைக்காமையால் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவைர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, 3600இற்கும் அதிக பஸ்கள் இன்று போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதனிடையே, வழமையான கால அட்டவணைக்கு ஏற்ப ரயில் சேவைகளும் இன்று முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்