மக்கள் ஒன்றிணைந்த பாராளுமன்றத்தை கோருகின்றனர் – PAFFREL

பொது இலக்கை அடையும் நோக்கத்துடன் அனைத்து வேட்பாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவரை அடுத்த ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்தால் அது சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு (PAFFREL) தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு பொதுவான வேலைத்திட்டம் தேவையே தவிர அரசியல் முரண்பாடுகள் அல்ல அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் சாதகமான மாற்றம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆட்சி, எதிர்க்கட்சி என பிளவுகள் இன்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டை உயர்த்துவதற்கு பாராளுமன்றம் தயாராக உள்ளது என்ற தெளிவான செய்தியை நாட்டின் குடிமக்களுக்கும் உலகிற்கும் வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்