கனடாச் செய்திகள்

கனடிய தலைநகர் ஒட்டாவாவில் கோலாகலமாக நடைபெற்றுவரும் கனடாவின் 150து பிறந்த தினம்!

  பல்லாயிரக்கணக்கான கனடியர்கள் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் திரண்டு கொண்டாடுகின்ற கனடாவின் 150வதுபிறந்தநாள் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை யூலை 1ம் திகதி காலை மழைத்தூறல் நிறைந்ததாக விடிந்தது. தலைநகர் ஒட்டாவாவில் திரண்டிருந்து மக்களிடம்தற்காலிக சோகம் குடிகொண்டது. இருந்தாலும் மதியம்வரை தூறிய ...

மேலும்..

கனடா நாட்டின் பெருமைகளை ஏழு மொழிகளில் பாடலாக தயாரித்த தமிழ் மகன்!

கனடாவின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரபல பாடகரும் மின்னல் இசையின் தயாரிப்பாளருமான செந்தில்குமரன் பாடலொன்றை ஏழு மொழகளில்  மிகச் சிறப்பாக தயாரித்துள்ளார். ஐந்து நிமிடங்கள் மட்டுமே  கொண்ட அந்தபாடல் கனடாவின் கலாச்சார பன்முகத்தன்மை, தேசிய அடையாளங்கள், நகரங்கள், முக்கியமான இயற்கை காட்சிகள்அனைத்தையும் உள்வாங்கி மிகவும் சிறப்புற தயாரித்தது மட்டுமன்றி பாடலின் தமிழாக்கத்தை தானே பாடியும் உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் நெருங்கிய தோழரும் பிரபல இசையமைப்பாளருமான பிரவின் மணி அவர்கள்இப்பாடலிற்கு இசை அமைத்துள்ளார். கனடாவில் இதுவரை எந்த இசை நிறுவனங்களும் நினைத்துப்பார்க்காத ஒருசிறந்த முயற்சியை தமிழ் மகன் ஒருவர் தயாரித்து வெளியிட்டுள்ளமை தமிழராகிய நம் அனைவருக்குமே பெருமைதரக்கூடிய ஒரு செயலாகும். முக்கியமாக கனடிய தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தேடி தரக்கூடிய ஒரு சிறந்தமுயற்சியாகும்.  

மேலும்..

கிங்ஸ்ரன் நகரில் தமிழ் அகதிப் படகுக் கண்காட்சி

கனடா தினக் கொண்டாட்டத்தின் பகுதியாக காட்சிப்படுத்தப்பட்டு வரும் தமிழ் அகதிப் படகு ஜூன் 27, 28 இரு தினங்கள் கிங்ஸ்ரன் நகரிலும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அங்கு வந்த ஆயிரக்கணக்கான கனடியர்களை‌ நெகிழ வைத்தது.  கிங்ஸ்ரன்நகரசபை கட்டிடத்தின் முன்னால் அமைந்திருந்த வளாகத்தில் படகுக் ...

மேலும்..

கனடாவில் 20,000 வருடங்கள் பழமையான இயற்கை அதிசயத்தை காண சந்தர்ப்பம்

கனடாவின் இயற்கை அதிசயங்களில் ஒன்றான 20,000 வருடங்கள் பழமையான மிதக்கும் பனிப்பாறை கனடா தினத்தை முன்னிட்டு கிங்ஸ்ரன் ஊடாக ஒட்டாவா பயணித்துள்ளது. கனடாவின் 150ஆவது பிறந்த தினத்தை கொண்டாட கனடாவிற்கு சொந்தமான Iceberg Vodka நியு பவுன்லாந்தின் மிதக்கும் மாபெரும் பனிப்பாறை அட்லாந்திக் ...

மேலும்..

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல் மகாவம்சம் - பல்கோணப் பார்வை சிறப்புப் பேச்சாளர்கள் உரை: "மகாவம்சத்தில் புனைவும் உண்மையும்" - கலாநிதி இ.பாலசுந்தரம் "மகாவம்ச  நோக்கில் இலங்கை வரலாறு" - கலாநிதி பால.சிவகடாட்சம் "மகாவம்சத்தின் பிறமொழிப் பரம்பல்" - திரு.என்.கே.மகாலிங்கம் "சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கை வரலாற்றில் மகாவம்சத்தின் வகிபாகம்"- திரு.வே.தங்கவேலு (நக்கீரன்) "புத்தகம் புதிது" - வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:     29-07-2017 நேரம்:  மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்:   ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்       Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9               (Dr. Lambotharan's Clinic - Basement) தொடர்புகளுக்கு:  அகில் - 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் அனுமதி இலவசம்

மேலும்..

மொன்றியால் கனடா தினக் கொண்டாட்டத்தில் தமிழ் அகதிப்படகு

  மொன்றியால் நகரில் கடந்த ஜூன் 24, 25 சனி, ஞாயிறு நடந்த கனடா தினக்கொண்டாட்டத்தில், சிறப்பு காட்சிப்பொருளாக 86ம் ஆண்டுத் தமிழ் அகதிப் படகு காட்சிக்கு வைக்கப்பட்டு வந்திருந்த அனைவரையும் பரவசப்படுத்தியது. கனடியத் தமிழர் பேரவையின் நாடு தழுவிய கனடாதினக் கொண்டாட்டங்களின் ...

மேலும்..

அமெரிக்கா மீதான நம்பிக்கையை இழந்த கனேடியர்கள்

உலக அரங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையின் மீதான நம்பிக்கையை கனேடியர்கள் பாரியளவில் இழந்துள்ளதாக 37 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் பிரகாரம் வெறும் 43 சதவீதமான கனேடியர்கள் மாத்திரமே அமெரிக்கா குறித்த நேர்மறையான பார்வையை கொண்டுள்ளனர். அதில் 22 ...

மேலும்..

கனடாவிற்குள் போதைப்பொருளை அனுமதித்த அதிகாரிக்கு சிறைத்தண்டனை

கனடாவிற்குள் 182 கிலோகிராம் கொகேயின் போதைப்பொருளை கொண்டு வருவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுங்க அதிகாரி ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கியூபெக் நீதிபதியினால் நேற்று இத்தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொகேயின் போதைப்பொருளுடன் ...

மேலும்..

ஒன்ராறியோவில் இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு

ஒன்ராறியோவில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பை ஒன்ராறியோ எரிசக்தி சபை அங்கீகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பின் எதிரொலியாக ஒன்ராறியோவின் என்பிரிட்ஜ் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு சுமார் 36 டொலர் ...

மேலும்..

கனடா கந்தசாமி ஆலய நிர்வாகசபையினரின் அவசர வேண்டுகோள்.

கனடா கந்தசாமி கோவிலின் கட்டுமான பணிகள் சிறப்பாக நடந்துவருகிறது. இந்த ஆலயம் மிக நுட்பமான முறையில் அனைத்து அரசாங்க உத்தரவுகளையும் பெற்று கட்டுமான பணிகள் நடைபெறுகின்றது. ஆலயத்தின் கட்டுமான தொகையான 7.5 மில்லியன் டாலரில் 5.5 மில்லியன் கடனாக பெற்றுள்ளோம் மீதம் ...

மேலும்..

கனேடிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமனது.

கனேடிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ நிகழ்வின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக நடந்தேறியது. சிவாச்சாரியார் திலகம் மாண்புமிகு குகனேஸ்வர குருக்கள் ஆகம விதிகளுக்கு அமைவாக கொடியேற்ற விழாவினை நடத்திவைத்தார்கள். ஏராளமான அந்த பெருந்தகைகள் சூழ ...

மேலும்..

Verty Party 2017

Men's Services for Mental Health நடத்திய இரண்டாவது "Verty Party 2017" நேற்று இரவு The Estate Banquet & Event Center, Scarboroughவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வு இரவு உணவு மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறப்பாக நடந்தேறியது. ...

மேலும்..

புத்தக வெளியீட்டு விழா

சமூகத்தில் சிறந்த மனிதரான திரு. குல செல்லத்துரை அவர்கள் எழுதிய "Action Leads to Success" என்ற புத்தக வெளியீட்டு விழா ஸ்கார்பரோவில் நடைபெற்றது. புத்தக வெளியீட்டில் கலந்துகொண்ட அனைவரும் திரு. குல செல்லத்துரை அவர்களுக்கு நம்பிக்கையும் ஆதரவும் தெரிவித்தனர். திரு. ...

மேலும்..

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுக்கு இடைக்கால தலைவர் நியமனம்

கனேடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் இடைக்கால தலைவராக ஜுடித் லாரோக் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஜுன்-பியர் பிளேஸின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து ஜுடித் லாரோக் குறித்த பதவியை ஏற்றுள்ளார். இதனடிப்படையில் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான ...

மேலும்..

அருள் மிகு கனடா கந்தசுவாமி ஆலய திருக்குடத் திருமுழுக்கு விழா.

ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் வணக்கம் அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலயத்தின். நிரந்தர முகவரியான, 733 பேரச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள ஆலயம், புனரமைக்கப்பட்டு வருவதைத் தாங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆலயத்தின் திருக்குடத் திருமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆலயத் திருப்பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் ஆலயமான அருள்மிகு கந்தசுவாமி ஆலயத் ...

மேலும்..