9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை: 1348 சந்தேகநபர்கள் கைது!!!!

இலங்கையில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக இதுவரை 1300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி இதுவரை 1348 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 638 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவர்களில் 654 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு உதவி செய்தமைக்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அமைதி போராட்டத்தின் மீதான தாக்குதல்களை அடுத்து 70 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட குறைந்தது 100 அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை தீயிட்டு அளிக்கப்பட்டது.
அத்தோடு அலரிமாளிகைக்கு அரசு சார்பு போராட்டக்காரர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் உட்பட 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன.
அலரிமாளிகை, காலி முகத்திடல் போராட்டக்கார்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மீண்டும் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.