றோயலின் வித்தியாரம்ப விழா 2022…

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை கிரீன்பீல்ட் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை கிரீன்பீல்ட்  கமு/ கமு/ றோயல் வித்தியாலயத்தில் தரம்-1  மாணவர்களை வரவேற்கும் “வித்தியாரம்ப” நிகழ்வு அண்மையில் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். அன்ஸார் தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் இஸட்.ஏ.எம். அஸ்மீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் சிறப்பு அதிதியாக கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம்.. ஸம்ஸம், அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர்களான எம்.கே.எம்.தாஸிம், ஏ. ராஸிக், பாடசாலை பிரதியதிபர் எம்.எம்.எம். இப்றாஹிம், ஆகியோருடன்  ஆசிரியர்கள்,  பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.