உலமா சம்பியன் கிண்ண மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி

 

(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை றவ்ழா விளையாட்டுக்; கழகம் ஏற்பாடு செய்த உலமா சம்பியன் கிண்ண மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் நிந்தவூர் காஷpபி அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

அம்பாரை மாவட்டத்திலுள்ள உலமாக்கள், ஹாபீல்கள் பங்குபற்றிய இப்போட்டியில் அணிக்கு 11பேர் கொண்ட 5ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டியில் 12 அணிகள் பங்குபற்றி இறுதி சுற்றுக்கு நிந்தவூர் காஷpபி அணியும், கல்முனை ஹிமாத்ப்ரதேஸ் அணியும் இறுதிசுற்றுக்கு தெரிவானது. சீரற்ற காலநிலையினால் இறுதிச்சுற்றுப்போட்டி 4ஓவர்களினால் மட்டுப்படுத்தப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நிந்தவூர் காஷpபி அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்படுத்தாடிய கல்முனை ஹிமாத்ப்ரதேஸ் அணி 4ஒவர் நிறைவில் 8விக்கெட்களை இழந்து 13ஒட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்படுத்தாடிய நிந்தவூர் காஷpபி அணி 1.2ஒவர் நிறைவில் ஒரு விக்கெட்களை இழந்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

சம்மாந்துறை றவ்ழா விளையாட்டுக்; கழகத்தின் தலைவர் மௌலவி ஏ.எம்.எம்.ஹாசிப் தலைமையில் சம்மாந்துறை யூ.எல்.எம்.முஹிடீன் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மௌலவி ஆசிரியர் ஐ.எல்.அப்துல் முனாப், பிரதேச வர்த்தகர்களான எம்.எச்.எம்.ஹாரீஸ், ஏ.எல்.நஜாத், எம்.ரீ.எம்.றிஸா, பௌஸ்தீன், ஜெமீல், நியாஸ், விளையாட்டுக் கழகத்தின் முக்கிஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்ற நிந்தவூர் காஷpபி அணிக்கு பனிரெண்டாயிரம் ரூபாய் காசோலையும் வெற்றிக் கிண்ணம் வீரர்களுக்கு பதக்கமும், இரண்டாம் இடத்தைப்பெற்ற கல்முனை ஹிமாத்ப்ரதேஸ் அணிக்கு எட்டாயிரம் ரூபாய் காசோலையும் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் சிறந்த பந்து வீச்சாளராக அக்கரைப்பற்று ஹபீயா அணியின் வீரர் மௌலவி முபீத், சிறந்த துடுப்பாட்ட வீராக நிந்தவூர் காஷpபி அணியின் வீரர் மௌலவி எம்.எம்.ஏ.அஷhம், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக நிந்தவூர் காஷpபி அணி வீரர் அல்-ஹாபீல் ஏ.எஸ்.றிப்தாஸ் ஆகியோர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.