பொதுத்துறை ஊழியர்களுக்காக வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் தயாராகிறது

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொதுத்துறை ஊழியர்களுக்காக வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை ஊழியர்களின் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இருப்பினும், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.