கடல் தீர்த்தம் எடுத்துவந்து கல்யாண கால் வெட்டுதலுடன் கண்ணகை அம்பாள் குளிர்த்தி ஆரம்பம் !

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமானது

அதனையொட்டி பிரதான வீதி மற்றும் ஆலய சூழல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த சடங்கு இந்த தடவை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று மாலை கடல் நீர் எடுத்து கல்யாண கால் வெட்டுதலுடன் ஆரம்பமான திருக்குளிர்த்தி சடங்கு 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடைய இருக்கிறது .கடந்த இரண்டு வருடம் கொரோனா காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திருக்குளிர்த்தி இடம் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்