பாராளுமன்ற ஆவணங்களை மென்பிரதிகளாக மாற்ற முடிவு

பாராளுமன்ற ஆவணங்களை எழுத்து மூலமற்ற மற்றும் காகிதமற்ற செயலாக மாற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு, முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் வருடாந்த அறிக்கைகள் உட்பட அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாராளுமன்ற செலவுகளை குறைப்பதற்கும், சுற்றுசூழல் பாதிப்பை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தேவையான அறிக்கைகள் மற்றும் பாராளுமன்றம் தொடர்பான ஏனைய ஆவணங்களை மென் பிரதிகளாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்துக்காக பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு சிறப்பு இணைய கோப்பை சேர்க்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.