அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது – விநியோகஸ்தர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் நிராகரித்துள்ளது.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் நாளாந்த அல்லது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை சிறிய அளவில் எரிபொருள் வழங்கப்படுவதாக சங்கத்தின் பிரதித் தலைவரான குசும் சந்தநாயக்க தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறும், தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.