நாட்டின் பலம் வாய்ந்த அமைச்சராக வரத் தயார் நிலையில் தம்மிக்க பெரேரா…

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டரீதியாக தடை ஏற்பட்டுள்ளது.


தம்மிக்க பெரேரா பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருப்பதால், அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரே அவற்றை விட்டு விலகியிருக்க வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக அரசாங்கத்துடன் டீல் செய்தால் அந்த ஆசனம் இரத்து செய்யப்படும்.

தம்மிக்க பெரேரா தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று முன்னர் வெளியான தகவல்களின் காரணமாக அவரது பல வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

எனினும், தம்மிக்க பெரேரா தொடர்பான சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்படும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாட்டின் அதிகாரம் மிக்க அமைச்சு ஒன்றை அவருக்கு வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலீட்டுத் துறை அமைச்சராக அவர் பதவியேற்பார் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள பல விடயங்களும் அமைச்சுக்குள் சேர்க்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.