வெற்றிடமாகியுள்ள பொதுஜன பெரமுனவின் எம்.பி. பதவிக்கு கடும் போட்டிவெற்றிடமாகியுள்ள பொதுஜன பெரமுனவின் எம்.பி. பதவிக்கு கடும் போட்டி

பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர்கள் பலர் இந்தப் பதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஏனைய வெளியாட்களும் இப்பதவியைப் பெற ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த பதவிக்கு பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், சட்ட நிலைமை காரணமாக அது சிக்கலாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்