ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் – சரத் பொன்சேகா..

சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடுமையான தண்டனை கிடைத்துள்ளதாக தாங்கள் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்தார்.

 

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும், அவர் மேலும் ஒன்பது மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க உள்ளதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்க தனது இலட்சியங்கள் மற்றும் இலக்குகளைக் கைவிடவில்லை எனவும் தற்போது தனது கல்வி இலக்கை கடுமையாகப் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ரஞ்சன் ராமநாயக்க, தண்டனைக்கு முன்னர் எம்.பி.யாக இருந்ததைப் போன்று தொடர்ந்தும் மக்களுக்கு சேவையாற்றுவார் என உறுதியாக நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்