முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களுக்கான “அருண தகின ரட” சித்திர ஆக்க நிகழ்ச்சி – 2022

நூருல் ஹுதா உமர்

முன்பிள்ளைப்பருவ பிள்ளைகளின் கலைத் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குதல், ஆக்கத் திறன்களை விருத்தி செய்தல், கலை ஆர்வத்தை மதிப்பிடுதல் மற்றும் கலையார்வத்தைக் கொண்ட முன் பிள்ளைப்பருவ பிள்ளைகள் பரம்பரை ஒன்றினைக் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையின் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் அருண தகின ரடா” சித்திர ஆக்க நிகழ்ச்சி மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினால் அமுல்படுத்தப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

“அருண தகின ரட” சித்திர ஆக்க நிகழ்ச்சியானது இறக்காமம் பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 முன்பள்ளிப் பாடசாலைகளில் இருந்து தெரிவு  செய்யப்பட்ட 100 மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு இறக்கமாம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) கலந்து கொண்டதுடன் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கி கௌரவித்தார். மேலும் சிறப்பு அதிதிகளாக கணக்காளர் றிம்ஷியா அர்சாட் மற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் ஏ.கே. றினோஷா உட்பட பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவில் கடமையாற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.