ஈழத்தமிழர்களுக்காக சுதந்திரமான பொது வாக்கெடுப்பிற்கு வழிகோலுமாறு, ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை.

கடந்த 2022.07.12ஆம் திகதி, செவ ;வாய்க்கிழமை வோசிங்ரன், டி.சி. – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்
மற ;றும் அரச சட்டசபை உறுப்பினர்களையும் மாநிலத் திணைக்கள அதிகாரிகளையும் வோசிங்ரன்,
டி.சி.யில் சந்தித ;துக் கலந்துரையாடிய பா.உ. கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள், இலங்கையின ;
தற ;போதைய அரசியல், பொருளாதார சூழல்பற ;றி விளக்கமளித்ததோடு, தமிழர்களுக்கு நிரந்தரமான
அரசியல் த Pர்வினைப ; பெற ;றுக்கொடுப்பதற ;கு சுதந்திரமான பொதுவாக்கெடுப்பு ஒன்றே பொருத ;தமானது
என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதேவேளை, பல்லாயிரக்கணக்கான மக்களின் இறப்பிற்கு வழிவகுத்த 30 ஆண்டுகால
இனவிடுதலைப்போர் மௌனிக்கப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அப்போருக்கான
அடித்தளமாக இருந்த ஈழத ;தமிழ் அரசியல் பிரச்சினைக்குத ; த Pர்வுகாண்பதில் அமெரிக்காவின்
தலைமைத்துவத்தின் அவசியத ;தை வலியுறுத ;தினார். காலம்காலமாக இலங ;கை அரசியல்
அதிகாரபீடங்களுக்கு வந்த அனைத்து சிங்கள தலைமைத்துவங்களும் தமது அரசியல் கட்சிகள ;
எவையாயினும், எப்போதுமே தமிழர்களுக்கெதிராகவே செயற்பட்டிருந்ததோடு அவர்களில் ஒரு
சிங்களத ; தலைவரேனும் தமிழர்களுக்கு முழு உரிமைகளையும் வழங்க முன்வந்திருக்கவில்லை.
அதனடிப்படையில் இலங்கையின் தற்போதைய வளர்ச்சி நிலையில், அப்பிராந்தியத்திற்கு
அமைதியையும் திடத ;தன்மையையும் கொண்டுவரக் கூடியதொரு பொதுவாக்கெடுப்பினை
ஜனநாயகரீதியாகவும் அமைதியாகவும் நடாத்துவதன் மூலம், தமிழர்கள் ஒரு பூர்வ Pக தேசிய
இனத ;தவர்கள் என்ற அங்கீகாரத்தோடு, வடக்கு, கிழக்குப் பிராந்தியங ;கள் தமிழர்களின் மரபுவழித்
தாயகம் என்ற அடிப்படையில் ஈழத ;தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வைப் பெற ;றுத்தருவதற ;கு
காத்திரமான பங ;களிப்பை வழங்குமாறு அமெரிக்காவிடம் அவர் கேட்டுக்கொண்டார். குறித்த
கலந்துரையாடலில் தமிழ்த ;தேசிய இனத ;தின் இருப்புக்காக குரல்கொடுத ;துவரும் அமெரிக்காவிலுள்ள
புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத ;தக்கது.
மேற ;படி கலந்துரையாடலின் போது, ஈழத ;தமிழர்களின் நலன்கருதி, அமெரிக ;க அரசு கீழ்வரும ;
நடவடிக்கைகளை மேற ;கொள்ளவேண்டுமென்ற கோரிக்கையை பா.உ. சிறீதரன் முன்வைத்துள்ளார்:
1. 1948இற ;கு முன்பிருந்தே இலங்கையில் பூர்வ Pகமாக வாழ்ந்துவரும் ஈழத ;தமிழ் மக்களுக்காகவும்
அவர்களது வழித்தோன்றல்களுக்காகவும், தமது தாய்நாட்டிலிருந்து வெளியேற ;றப ;பட்ட
புலம்பெயர்வாழ் ஈழத ;தமிழர்களிடையே ஜனநாயகரீதியாகவும் அமைதியாகவும் தமது
சுதந்திரத்தினைத் த Pர்மானிப்பதற ;காக, சர்வதேச சமூகத்தினால் கண்காணிக்கப்படும் சுதந்திரமான
பொதுவாக்கெடுப்பொன்றை நடாத ;துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது.
2. இலங ;கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத ;தி இனப்படுகொலை, மனித
குலத்திற்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், பகைமை மற ;றும் பிரிவினைவாதக்
குற்றங்களுக்கெதிராக விசாரணைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, இனப்படுகொலைக்
குற்றத ; தடுப்பு மற ;றும் தண்டனைக்கான த Pர்மானத ;தின்கீழும் சித ;திரவதைக்கெதிரான
த Pர்மானத ;தின்கீழும் பகைமை மற ;றும் பிரிவினைவாதக் குற்றங்களின்கீழும் சர்வதேச நீதிக்கான
நீதிமன்றத ;தின் முன்னால் இலங்கையை நிறுத்தி அதற ;கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது.
3. இப்பொதுவாக்கெடுப்பு நடாத ;தப்படும்வரையில் நாட்டின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத ;திலுள்ள
ஈழத ;தமிழர்களை ஆட்சிசெய்யவும் அவர்களையும் அவர்களது நிலங்களையும் பாதுகாப்பதற ;குமாக
ஓர் இடைக்கால சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறையினை உருவாக்குவதற ;கான
நடவடிக்கைகளை எடுப்பது.
4. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, பாரிஸ் கிளப், ஆசிய அபிவிருத ;தி வங்கி உள்ளிட ;ட
சர்வதேச சமூகத்திடமிருந்து இலங ;கை பொருளாதார உதவியினை கோரும் வேளையில்,
நிபந்தனைகளற்று எந்தவொரு உதவியும் வழங ;கப்படக்கூடாதென தமிழர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஐ.நா. மற ;றும் ருNர்சுஊ உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற ;கான இலங ;கையின் முதன்மையான
பொறுப்புக்களையும் இலங ;கையின் ஏமாற்று வடிவங்களையும் சர்வதேச சமூகமானது
விளங்கிக்கொள்ள வேண்டும். இலங ;கைக்கான உதவிகள் எவையேனும் வழங ;கப்படும்போது
பின்வரும் நிபந்தனைகளை விதிக்கப்படவேண்டும்:
அ. இலங ;கையானது நிறைவேற ;றப ;படாத அனைத்து ருNர்சுஊ த Pர்மானங்களையும ;
நடைமுறைப்படுத ;தவேண்டும்.
ஆ. மீண்டும் இடம்பெறாதென்ற உத்தரவாதமாக, இலங்கை, ரோமானிய சட்டத்தினை
ஏற ;றுக்கொள்ள வேண்டும் என்பதோடு இனவிடுதலைப்போரின்போது தமிழ்
மக்களுக்கெதிராக மேற ;கொள்ளப்பட்ட அனைத்துக் குற்றங்களுக்குமாக சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத ;தினால் விசாரணை செய்யப்படுவதற்கும் சம்மதிக்கவேண்டும்.

இ. தமிழர் பிராந்தியத ;திலிருந்து இலங ;கை இராணுவத்தினை அகற ;றுதல் மற ;றும் போருக ;கு
முன்னர் 1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்த இலங ;கை இராணுவத ;தின்
அளவிற்கு இராணுவப் படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது.
ஈ. இடைக்கால சர்வதேசப ; பாதுகாப்புப் பொறிமுறையினையும் ஈழத ;தமிழர்களுக்காக
சுதந்திரமான பொதுவாக்கெடுப்பினையும் ஏற்றுக்கொள்வது.

என்பவை உள்ளிட்ட பல முக்கியவிடயங்கள் மேற ;படி கலந்துரையாடலின் போது, பா.உ சிவஞானம்
சிற Pதரன் அவர்களால் அமெரிக்க இராஜதந்திர குழுவினருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை
குறிப்பிடத ;தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.