பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் தற்போதுள்ள பிரச்னைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – தொழிற்சங்கங்கள்

பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு, இறுதி முடிவு எடுப்பதற்கு முன், நடைமுறையான தீர்வுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தீர்வுகளை வழங்காமல் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பது வீண் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பாடசாலை தவணை ஆரம்பத்தை ஜூலை மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வி சேவைக் குழுக்கள் உட்பட பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள், போக்குவரத்தை பாதுகாப்பதில் உள்ள சிரமங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவர்களின் பிரச்சினைகளுக்கு அமைச்சு தீர்வுகளை வழங்கத் தவறியதால், அவர்களின் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் நேரப் பற்றாக்குறையை அதிகாரிகள் கருத்திற்க் கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்