கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வர்த்தமானி வெளியீடு

மீண்டும் கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்மாதம் 5 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் கையொப்பமிடப்பட்டது.

க்ளைபோசேட் இறக்குமதிக்கான பூச்சிக்கொல்லிப் பதிவாளரின் பரிந்துரைக்கு உட்பட்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமத்தை வழங்குவார் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்