பெத்தும் கெர்னரை கைது செய்ய பிடியாணை…

அழைப்பாணை அனுப்பப்பட்ட பின்னரும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னரை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

பெத்தும் கெர்னருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்ட போதிலும், இன்று காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்