முட்டை மாஃபியா இடம்பெறுகிறது!

தற்போது முட்டை மாஃபியா இடம்பெற்று வருவதாக கோழிப்பண்ணையாளர்களை பாதுகாக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தீவனத்திற்கு தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால் தற்போதுள்ள விலையை விட குறைந்த விலைக்கு முட்டையை விற்க முடியும் என கோழிப்பண்ணையாளர்களை பாதுகாக்கும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ கருணாசாகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், சோயா மற்றும் இதர சத்துக்களின் தயாரிப்புகள் போதுமான அளவு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்றும், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளிடையே மேற்கூறிய பொருட்களின் விநியோகத்தை கண்காணிக்க ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சில குழுக்கள் விநியோகச் சங்கிலியைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை அதிக விலைக்கு விற்கவும் முயற்சிப்பதாகவும், இது சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளைப் பாதிக்கும் என்றும் அவர் .தெரிவித்தார்.

இதேவேளை, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கணிப்பீட்டின் பிரகாரம், முட்டையின் விலை ரூபா 45 உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.