10 நிமிடங்களில் ஒரு இலட்சம் ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன

ரயில்களில் இருக்கை முன்பதிவு செயல்முறையை மறுசீரமைக்க வேண்டியா தேவை ஏற்பட்டதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பிற போக்குவரத்துச் செலவுகள் அதிகமாக உள்ளதால், மக்கள் ரயில் பயணங்களை அதிகமாக தெரிவு செய்கின்றனர். இதன்படி சுமார் 10 நிமிடங்களில் கிட்டத்தட்ட ஒரு இ லட்சம் ரயில் இருக்கைகள் ஒன்லைனில் முன்பதிவு செய்யப்படுகின்றன

தினமும் காலை 10.00 மணிக்கு ஒன்லைன் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு தொடங்கப்பட்ட பிறகு, இருக்கை முன்பதிவு சுமார் 10.10 மணிக்கு முடிவடைகிறது , எனவே இருக்கை முன்பதிவுக்கான 14 நாட்கள் அவகாசம் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

இதுதவிர முன்பதிவு செய்ய வேண்டிய ரயில் இருக்கைகளில் 60 சதவீதம் ஒன்லைனிலும், 40 சதவீதம் ரயில் நிலையத்திலும் கிடைக்குமாறு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.