பாராளுமன்றத்தின் ஒருமாத மின் கட்டணம் 60 இலட்சம் ரூபா

பாராளுமன்றத்தின் ஒருமாத மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக இன்று தெரியவந்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின் போதே இந்தவிடயம் தெரியவந்துள்ளது.

பாராளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் எனவும், அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் இங்கு மன்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாரா ளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவதே . இருப்பினும், அதற்காக தங்கள் அமைச்சால் பணம் கொடுக்க முடியாது, தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.