நெல் கொள்வனவு மீள ஆரம்பிக்கப்படுமா? கலந்துரையாடல் இன்று

நெல் கொள்வனவை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(21) நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அரச வங்கிகளின் உத்தியோகத்தர்களும் பங்கேற்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதனிடையே, நெல் கொள்வனவை அரசாங்கம் நிறுத்தியுள்ள காரணத்தினால் விவசாயிகள் தமது அறுவடையை விற்பனை செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.