போதைப் பொருளுக்கு மாணவர்கள் அடிமையாவது தொடர்பில் ஊடகங்கள் தகவல் வெளியிடுவது எமது சமுதாயத்தை கேவலப்படுத்தும் ஒரு செயல் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ் .வரதீஸ்வரன் தெரிவித்தார்.

மாணவர்களின் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலையைச் செய்யாத கல்விச் செயலாளர் மாணவர்களின் சீரழிவை ஊடகங்கள் வெளிப்படுத்துவது.. சமுதாயத்தை கேவலப்படுத்துதாம்.. போதைப் பொருளுக்கு மாணவர்கள் அடிமையாவது தொடர்பில் ஊடகங்கள் தகவல் வெளியிடுவது எமதுசமுதாயத்தை கேவலப்படுத்தும் ஒரு செயல் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ் .வரதீஸ்வரன் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை யாழ் வைத்தீஸ்வரா பாடசாலையின் கட்டட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில் எமது மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையான கூட்டம் தான் என கேவலப்படுத்தும் விதமாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது ஊடகவியலாளர்கள் யாராவது இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இது ஒரு பகுதியாக போய்க்கொண்டிருக்கட்டும் அதை விடுத்து 20 கிராமங்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதாகக் கூறுகிறார்கள் அதில் உண்மையும் இருக்கிறது. போதைப் பொருள் பாவனை என்பது இன்று நேற்று கண்டுபிடித்த விடயம் அல்ல ஊடகங்கள் பெரிதாக படம் காட்டுகின்றன. அதே நேரம் பூஜை பாடல் தொடர்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கு வைப்பது அவ்வளவு பெரிதாக நல்லதல்ல ஏனெனில் தொடர்ச்சியாக கருத்தரங்க வைப்பதால் போதை பொருள் தொடர்பில் மாணவர்கள் அறியக்கூடிய ஆவலை தூண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.