சிறிலங்கா கடற்பரப்பிற்குள் பிரவேசித்தது சீனக் கப்பல்!
சிறிலங்கா கடற்பரப்பிற்குள் சீனக் கப்பல் ஒன்று பிரவேசிக்கவுள்ளதாக சிறிலங்காவின் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், குறித்த சீனக் கப்பல் இன்று வெள்ளிக்கிழமை காலை சிறிலங்கா கடற்பரப்பை வந்தடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தீப்பற்றியெரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காகவே சீனக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதைவுகளை அகற்றும் செயற்பாடு
கடந்த வருடம் ஜுன் மாதம் 20ஆம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்து காரணமாக அந்த கப்பலில் இருந்த கொள்கலன்கள் உட்பட சுமார் 1700 மெற்றிக் தொன் சிதைவுகள் கடலில் கலந்துள்ளன.
இந்தநிலையில் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை