நேசக்கரங்கள்- கனடா தலைமை அமைப்பின் ஒழுங்கமைப்பில் கனடாவில் இயங்கி வரும் ELEVEN STAR SPORTS CLUB வீரர் அருண்.விக்கினேஸ்வரன் அவர்களின் நினைவாக உதைப்பந்தாட்ட சமர்…….

வணக்கம் அன்பு உறவுகளே தாய்த்தமிழ்பேரவையின் ஆதரவோடு நேசக்கரங்கள்- கனடா தலைமை அமைப்பின் ஒழுங்கமைப்பில் கனடாவில் இயங்கி வரும் ELEVEN STAR SPORTS CULP நண்பர்களின் நிதி அனுசரனையிலும் மற்றும் கனடா ஜாமிஸ் விளையாட்டுக்கழக வீரர் அருண்.விக்கினேஸ்வரன் அவர்களின் நினைவாக அவரது பெற்றோர்களின் நிதி அனுசரனையில் உதைப்பந்தாட்ட சமர்…….

 

அந்த வகையில்.விசுவமடு லாலாரஞ்சன் விளையாட்டுக்கழகத்தால் 20 அணிகளுக்கான போட்டிகள் நடைபெற்று இறுதி இரு அணிகளுக்கான போட்டிகள் 08.11.2022 அன்று தாய்த்தமிழ்மகளிர் பேரவையின் முல்லைமாவட்டத்தின் தலைவி திருமதி ப.குணசிவா அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந்த் , மற்றும் சிறப்பு விருந்யினர்களாக மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு ந.முகுந்தன்,, புதுக்குடியிருப்பு காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு . M.B.R கேரத், தாய்த்தமிழ்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு த.நவநீதன்,, நேசக்கரங்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு.சி.குகநேசன் ,, விசுவமடு மேற்கு கிராமசேவையாளர் திரு. ந.பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முதலாம் இடத்தினை கிளிநொச்சி முரசுமோட்டை விளைபூமி விளையாட்டுக்கழகமும் இரண்டாம் இடத்தினை முல்லை புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அண்ணா விளையாட்டுக்கழகமும் வெற்றிகளை தமதாக்கியது………

 

வெற்றிபெற்ற முதலாம் அணிகளுக்கான ரூபா 30,000/= பணப்பரிசும், இரண்டாம் அணிக்கான ரூபா 20,000/= ஆயிரம் பணப்பரிசும் பெறுமதிமிக்க வெற்றிக்கிண்ணங்களும் அதற்கான அனுசரனையாக ரூபா 75,000/= ரூபாவினை கனடா ஜாமிஸ் விளையாட்டுக்கழக வீரர் அருண்.விக்கினேஸ்வரன் அவர்களின் நினைவாக அவரது பெற்றோர்கள் வழங்கி வைத்தனர் அத்தோடு ஏனைய வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணம் , லாலாரஞ்சன் விளையாட்டுக்கழக 15 வீரர்களுக்கான சீருடை, விளையாட்டுப்போட்டிகளுக்கான மைதான புனரமைப்பு, ஏனைய உபசரனை , ஒலிஒளி , பந்தல், சிற்றுண்டி உபசரனை ஆகிய அனைத்து செலவுகளுக்குமான நிதி அனுசரனையை கனடாவில் இயங்கி வரும் LEVEN SAR SPORTS CULP நண்பர்கள் நிதி அனுசரனையாக ரூபா 15,0000/= வழங்கி வைத்தனர் இப்பணிக்காக நிதி அனுசரனையை.வழங்கி வைத்த கனடாவில் இயங்கி வரும்LEVEN SAT SPORTS CULP நண்பர்களுக்கும் கனடா ஜாமிஸ் விளையாட்டுகழக வீரர் அருண்.விக்கினேஸ்வரன் அவர்களின் பெற்றோர்களுக்கும் இவ் விளையாட்டு நிகழ்வை ஒழுங்கமைத்த நேசக்கரங்கள் அமைப்பிற்கும் லாலாரஞ்சன் விளையாட்டுகழக நிர்வாகத்தினருக்கும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

நன்றி ச.ரூபன் ஸ்தாபகர் தாய்த்தமிழ்பேரவை, மற்றும் ஒருங்கிணைப்பாளர் நேசக்கரங்கள்- கனடா தலைமை அமைப்பு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.