மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி..! 6 பெண்கள் கைது

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்று கல்கிஸை இரத்மலானை பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (15) மாலை இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பில் விபச்சார விடுதியை நிர்வகித்த சந்தேகத்தில் பெண் ஒருவரும் மேலும் 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நபர்கள்

 

 

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி..! 6 பெண்கள் கைது | Brothel Disguised As Massage Parlor

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது.

அத்துடன் கைதானவர்கள் இந்நிலையில் மீகஹதென்ன, மெதினிஓயா, காலி, திகன, ஹபரன்னாவல, இரத்மலானை மற்றும் நுகேகொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (நவ.16) கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதுடன் மேலதிக விசாரணைகளை கல்கிஸை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.