போதைப் பொருள் கைதிகளின் மறுவாழ்வுக்கான திட்டம் உருவாக்கப்படும்.. கைதிகளை சந்தித்த பின் ஆளுநர் தெரிவிப்பு.

வடக்கில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கைதிகளின் எதிர்கால வாழ்க்கை தொடர்பில் திட்டங்களை உருவாக்க எண்ணியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கைதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சுமார் 30க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தண்டணைக் காலம் நிறைவடைந்த பின்னர்  அவர்களின் எதிர்கால வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்வது  தொடர்பில் நாம் சில வேலை திட்டங்களை உருவாக்க எண்ணியுள்ளோம்.

சிறையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில்  சிறையில் இருந்து வெளியேறிய பின் அவர்களின் ஏனைய தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.