சைவப்புலவர் சங்கத்தின் அறுபதாம் ஆண்டு பூர்தியை முன்னிட்டு சைவசமயம் சார்ந்த போட்டிகள்.

சாவகச்சேரி நிருபர்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 60ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள்,அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மற்றும் திறந்த மட்ட போட்டியாளர்கள்(18-30வயது) மத்தியில் 4மாகாணங்களில் சைவ சமயம் சார்பாக போட்டிகளை நடத்தவுள்ளனர்.
அந்தவகையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பண்ணிசைப் போட்டி,தொண்டுபாடும் செயன்முறைப் போட்டிகள்,புராண படனப் போட்டி,கதாப் பிரசங்கப் போட்டி,மிருதங்கப் போட்டி மற்றும் வில்லுப்பாட்டு ஆகிய போட்டிகளும்-
திறந்த மட்டப் போட்டிகளாக புராண படனம்,கதாப் பிரசங்கம்,மிருதங்கம்,வில்லுப்பாட்டு மற்றும் மேடை நாடகப் போட்டிகளையும் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.
எனவே போட்டிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள் எதிர்வரும் 30/11/2022 முன்பாக தமது விண்ணப்பங்களை saivappulavarsangam1960@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது சைவப்புலவர் சி.கா.கமலநாதன்,தலைவர்,அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்,இல 610 காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போட்டிகள் வடமாகாணத்தில் யா/வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்திலும்,மேல் மாகாணத்தில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியிலும்,கிழக்கு மாகாணத்தில் மட்/ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையிலும், மத்திய மாகாணத்தில் மத்/இந்து சிரேஷ்ட பாடசாலையிலும் டிசம்பர் 10மற்றும் 11ம் திகதிகளில் இடம்பெறும் என அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் தெரியப்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.